மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல்

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர்  நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் உறுதியளித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி, நிலைமையை கேட்டறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்.”

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...