மோடி வழங்கிய ராஜஸ்தானி தலைப்பாகை அணிந்து இனியாவை கௌரவித்த நவாஸ்

உலகநாடுகளை ஆச்சரியப்படுத்திய பிரதமர் மோடி-நவாஸ் சந்திப்பின் போது பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தது. இதுசந்திப்பு  முடிந்த பின்னும் தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேத்தி மெஹருன்னிசாவின் திருமணவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக் கிழமை லாகூரில் தரையிறங்கிய மோடியை உற்சாகத்துடன் வரவேற்ற நவாஸ், அங்கிருந்து அவரை ராவிண்ட் பகுதியில் உள்ள தனது பாரம்பரிய  வீட்டிற்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துசென்றார். வரலாற்றிலேயே இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் ஒன்றாக பயணம்செய்தது இதுவே முதல் முறை என பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தனது குடும்ப உறுப்பினர்கள் பலரையும் மோடிக்கு நவாஸ்ஷெரிப் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது, “உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இங்கு தான் வசிக்கிறார்களா?” என்று ஆச்சர்யத்துடன் மோடி கேட்க,  “ஆமாம், 70-80 குடும்ப உறுப்பினர்கள் இந்தபெரிய வீட்டில்தான் வசிக்கின்றனர்.” என்றார் நவாஸ்.

பின்னர் நவாசின் அரண்மனை போன்ற வீட்டை சுற்றிப் பார்த்த மோடி, இங்கு நான் இனி அடிக்கடிவருவேன் என்று கூற, “தாராளமாக, இது உங்கள் வீடு, நீங்கள் எப்போது வேண்டு மானாலும் வரலாம்” என அக மகிழ்ச்சியுடன் நவாஸ் கூறினார்.

80 நிமிடங்கள்வரை நீடித்த இந்த சந்திப்பின்போது, நவாசின் தாயாரது காலைதொட்டு ஆசி பெற்ற மோடி, நவாஸ் ஷெரிப்பிடம் புடவைகள் உட்பட பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று அங்கு வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சவுதி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 2 ஆயிரம் விருந்தினர்கள் இந்தநிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிப் பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்த இளஞ்சிவப்பு நிற ராஜஸ்தானி தலைப்பாகை அணிந்து கம்பீரமாக காட்சியளித்தார்.

மோடி பரிசளித்த தலைப் பாகையை உடனடியாக அணிந்துகொண்டது அண்டை நாடான இந்தியா மீது அவருக்கு உள்ள உண்மையான உள்ளன்பை வெளிப் படுத்துவதாக இருப்பதாகவும், இது மோடியின் மீது அவர் வைத்துள்ள மதிப்பை காட்டுவதாகவும் அவரது கட்சித்தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...