பாகிஸ்தான் பயங்கர வாதிகளுக்கு உதவி செய்யும் ஆதாரங்களை வெளியிட்டார் ஆப்கான் முன்னாள் உளவுத் துறை தலைவர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறது என்பது தொடர்பான ஆவணங்களை ஆப்கானிஸ்தான் முன்னாள் உளவுத்துறை தலைவர் ரகுமத்துல்லா நபில்  வெளியிட்டார்.

பாகிஸ்தான் உளவுத்துறை தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாத இயக்க த்திற்கு  உதவியது தொடர்பான ஆதாரங்களை அதில் குறிப்பிட்டு காட்டி உள்ளார்.

2015-ம் ஆண்டு ஆப்கானிஸ் தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘ஆசியா வின் இதயம்’ மாநாட்டில் நடைபெற்றது. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி கலந்து கொண்ட மாநாட்டில் தீவிரவா தத்திற்கு எதிராக இணைந்து செயல்படுவது என்று மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை யடுத்து பாகிஸ்தானை நம்ப முடியாது என்று கூறிய அப்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் உளவுத் துறை அதிகாரியாக இருந்த ரகுமத்துல்லா நபில் ராஜினாமாசெய்தார். பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்துவது மற்றும் தலிபான் பயங்கர வாதிகளுடன் பேச்சுவார்த்தை ஆகிய விவகாரங்களுக்கு ரகுமத்துல்லா நபில் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுவரையில் பாகிஸ்தான் உளவுத் துறை உதவியுடன் ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாத இயக்கம்மூலம் ஆப்கானில் தாக்குதலை முன்னெடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறது என்பது தொடர்பான ஆவணங்களை ரகுமத்துல்லா நபில் வெளியிட்டார். ஆப்கானிஸ் தானில் முக்கிய நபர்கள் கடத்தப் பட்டது மற்றும் அதிபயங்கர தாக்குதல் நடத்தியதில் குற்றம்சாட்டப்படும் தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாத இயக்கத்துடன் பாகிஸ்தான் உளவுத் துறைக்கு உள்ள உறவு தொடர்பாக உறுதியான ஆதாரங்களை வெளியிட்டு உள்ளேன் என்று காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுமத்துல்லா கூறிஉள்ளார்.

இது தொடர்பாக (ஆவணங்கள்) பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மற்றும் ராணுவத்தின் ஊடகபிரிவிற்கு பல்வேறு முறை பதில்அளிக்க தொலைபேசி மற்றும் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுக்கப் பட்டதாகவும், ஆனால் பாகிஸ்தான் தரப்பில் பதில் அளிக்கப்பட வில்லை என்று ராய்ட்டர்ஸ் கோடிட்டு காட்டிஉள்ளது. இது போன்று ஆப்கானிஸ்தான் தரப்பிலும் உடனடி கருத்துக்கள் கடிதம்தொடர்பாக கிடைக்கப்படவில்லை. நபில் எப்படி இக்கடிதங்கள் பெறப்பட்டது என்பதுதொடர்பாக பதில் அளிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தினாலும் உடனடியாக அதனுடைய நம்பகத்த ன்மையை சரிபார்க்க முடியவில்லை.

ஆப்கானிஸ்தான் உளவுத் துறை தலைமை பொறுப்பில் இருந்து ராஜினாமாசெய்ததில் இருந்து நபில் தொடர்ச்சியாக பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். ஆப்கான் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துவருகிறது.

கடிதங்கள் விபரம்

இதுதொடர்பான ஆவண கடிதங்களை வெளியிட்ட நபில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 14 வருடங்களில் இது போன்ற ஆவணங்களை யாரும் வெளியிடவில்லை. இப்போது நான் அதனை நிரூபித்துள்ளேன். அவர்கள் எங்களை தினமும் கொல்கிறார்கள் மற்றும் அவர்கள் அனைத்துவிதமான அட்டூழியங்களிலும் ஈடுபடுகின்றனர், அதனை நாங்கள் வெளிப்படுத்த வேண்டும்,” என்று கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் பெஷாவர் உளவுப் பிரிவின் முகவரி முத்திரையிடப்பட்ட கடிதம் “ஆப்கான் தலிபான் மற்றும் அவர்களின் தலைவர் களுக்கான வீடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்,” என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. கடிதத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவநடவடிக்கை என்ற கூறப்பட்ட கால கட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான வீடுகள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பு முகமை ஏற்பாடுசெய்து உள்ளது என்பதை காட்டுகிறது.

மார்ச் 2015 தேதியிட்ட மற்றொரு கடிதத்தில் கைபர்பக்துன்கவா எல்லையில் நாவ்சேரா, மார்தன் மற்றும் ஷவாபி அகிய இடங்களில் உள்ள ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாதிகளின் செயல்பாடுகுறித்து தெரிவிக்க கோரிக்கை விடுத்து உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் புலனாய்வுபிரிவு முகவரியிட்ட மூன்றாவது கடிதத்தில் ஜூலை 2014 தேதியிடப்பட்டு உள்ளது. “காபூல் விமானநிலைய தாக்குதல்கள் மற்றும் பணம் வழங்கல்,” என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. கடிதத்தில் காபூல் விமான நிலையத்தில் தாக்குதலை வெற்றிகரமாகமுடித்து, விரிவான மரண சேதத்தை ஏற்படுத்த, ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாத இயக்கத்தைசேர்ந்த 4 பேருக்கு 2.5 மில்லியன் பாகிஸ்தான் பணம் ($24,000) அனுப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் எப்போதும் போல நாங்களே பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்று முதலைகண்ணீர் வடித்து மறுக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...