வெண் தாமரைப் பூ

 இதய நோய்
இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை கூடும். இதனுடைய மகரந்தம் தூளை சேகரம் செய்து உள்ளுக்குச் சாப்பிட்டுக் கொஞ்சம் வெந்நீர் அருந்த நாளடைவில் ஆண்மை பெறுவான்.

இருதய நோய் நீங்க கஷாயம்
தேவையான வெண்தாமரை சுமார் ஐந்து இதழ்கள் கொண்டு வந்து உதிர்த்து, உதிர்ந்ததை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மில்லி அளவு தண்ணீரை அதில் ஊற்றி, அடுப்பில் வைத்து 100 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சர்க்கரை, போதுமான பசும் பால் சேர்த்து காலை – மாலை இருவேளை அருந்தவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் 20 நாட்கள் அருந்தி வரும் பட்சம், இருதய நோய்களுக்கும், இருதய வலிமைக்கும் உகந்தது.

இருதய படபடப்பு நீங்க
தேவையான வெண்ணிறமான இதழ்களை ஆய்ந்து எடுத்துப் பொடியாக நறுக்கி ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி இறக்கி, அதில் உள்ள இதழ்களைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி, வைத்துக்கொண்டு, பிறகு மூன்று கைப்பிடி வல்லாரை இலையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து இடித்துக் கசக்கிப் பிழிந்த சாறு மூன்று தேக்கரண்டி அளவு சாற்றை இதழ்களின் பிழிந்த சாற்றில் கலந்து காலை – மாலை தொடர்ந்து பத்து நாட்கள் அருந்தி வர இருதய படபடப்பு நீங்கிக் குணமாகும்.

ஜன்னி ஏற்பட்டால்
வெண்தாமரைக் கசாயம் செய்து குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவும், பெரியவர்களுக்கு 50 மில்லி வீதமும், ஒரு நாளைக்கு 3 வேலை கொடுக்க நாளடைவில் ஜன்னி தணிந்து குணம் தெரியும்.

மூளை வளர்ச்சிக்குக் குடிநீர்
முதலில் – தேவையான வெண்தாமரைப்பூ ஒன்றைக் கொண்டு வந்து ஓர் மண் பாண்டத்தில் உதிர்த்துப் போட்டு இதனுடன் 200 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 100 மில்லி அளவாக சுண்டக் காய்ச்சி வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, வடிகட்டிய இந்த நீரை ஒரு வேளைக்கு 100 மில்லி வீதம் 3 வேளை அருந்த வேண்டும். இவ்விதமாக அரை மண்டலம் (20 நாட்கள்) அருந்தி வரும் பட்சம் மூளை தொடர்பாக ஞாபக சக்தியும் ஏற்படும். எந்தவிதக் குறைபாடும் இல்லாவிட்டாலும், மூளையின் தீர்க்கமான செயற்பாட்டிற்கு இது உகந்தது.

மனநோய் நீங்க
தேவையான வெண்தாமரையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து கஷாயம் வைத்து 1 மண்டலம் (4o நாட்கள்) அருந்திவரும் பட்சம் இருதய நோயும், அதோடு மனநோயும் நீங்கிக் குணமாகும்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...