தீவிரவாதம் நிகழ்கால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தவிவகாரத்தில் சிலநாடுகள் கபடநாடகம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுசபையில், முதன்முறையாக அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கான உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம். ஜே.அக்பர் பேசியதாவது:
சர்வதேச அளவில் 25 கோடி பேர் (30-ல் ஒருவர்) அகதிகளாக உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகி றது. இதில் 75 சதவீத அகதிகள் வெறும் 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஒருநாட்டில் நடக்கும் இனமோதல், போர் மற்றும் வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பிறநாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்கிறார்கள். இது தவிர தீவிரவாதமும் அடிப்படைக் காரணமாக விளங்குகிறது.
எனவே, தீவிரவாதத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. தீவிரவாதம் இப்போது நிகழ்கால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. மனித உரிமைக்கு மிகப் பெரிய அபாயமாகவும் இது விளங்குகிறது.
இதை நல்லதீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்று பிரித்துப்பார்க்க முடியாது. இந்தவிவகாரத்தில் சில நாடுகள் கபடநாடகம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் அனைவரும் இணைந்து வளமாக வாழவேண்டும் அல்லது அனை வரும் மடிந்துவிட வேண்டும். நாம் அமைதியாகவும் இணக்கமாகவும் வளமாகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
நோய் வந்த பிறகு அதைக் குணப்படுத்துவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. எனவே, சொந்த நாட்டை விட்டு மக்கள் வெளியேறு வதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காணவேண்டும்.
குறிப்பாக தீவிரவாதத்தை ஒடுக்கவும் உள்நாட்டுப்போர் உருவாவதைத் தடுக்கவும் சர்வதேச சமுதாயம் முன்வரவேண்டும். நல்லாட்சி, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதன் மூலமும் அகதிகள் உருவாவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.