சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள் – மோகன் பகவத்

”அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் இதே போன்ற பிரச்னையை கிளப்பி, ஹிந்துக்களின் தலைவர்களாக மாற சிலர் நினைக்கின்றனர்; இதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் மதுரா, சம்பல் உட்பட பல்வேறு இடங்களில் மசூதி உள்ள இடத்தில் ஒரு காலத்தில் ஹிந்து கோவில் இருந்ததாகவும், அதை அகற்றிவிட்டு கோவில் கட்ட வலியுறுத்தியும் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த மசூதிகளில் தொல்லியல் துறை ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரங்கள் நடந்தன. இதை நேரடியாக குறிப்பிடாமல், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் புனேவில், ஹிந்து சேவை அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:

ராமகிருஷ்ண மடத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. நம்மால் மட்டுமே இதை செய்ய முடியும். காரணம், நாம் ஹிந்துக்கள்.

நாம் காலங்காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த நல்லிணக்கத்தை உலகிற்கு வழங்க வேண்டுமானால், அதற்கான முன்மாதிரியை நாம் உருவாக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், அதே போன்ற பிரச்னையை பல்வேறு இடங்களிலும் எழுப்பி, ஹிந்துக்களின் தலைவர்கள் ஆகலாம் என சிலர் நினைக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ராமர் கோவில் அனைத்து ஹிந்துக்களின் நம்பிக்கையாக இருந்ததால் அது கட்டப்பட்டது. ஆனால், ஒவ்வொரு நாளும் இதே போன்ற பிரச்னைகள் கிளப்பப்படுகின்றன.இதை எப்படி அனுமதிக்க முடியும்? இதை தொடர விடக்கூடாது. நாம் ஒன்றாக சேர்ந்து வாழ முடியும் என்பதை உணர்த்த வேண்டும். இன்றைக்கு நம் நாடு அரசியலமைப்பு சட்டப்படி இயங்குகிறது. யார் அரசு நடத்த வேண்டும் என்பதை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். மேலாதிக்க காலமெல்லாம் முடிந்துவிட்டது.

ஹிந்துக்கள் வசம் ராமர் கோவில் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டது. இதை மோப்பம் பிடித்த ஆங்கிலேயர், இரு சமூகத்தினருக்கு இடையே பிளவை ஏற்படுத்தினர். அதன் பின் தான் பிரிவினை என்ற சிந்தனை தோன்றி, பாகிஸ்தான் என்ற நாடு உருவானது.

இங்கு யாரும் சிறுபான்மையினர் இல்லை; பெரும்பான்மையினரும் இல்லை; அனைவரும் சமம். அனைவரும் தங்கள் விருப்பப்படி வழிபாட்டு முறையை பின்பற்றலாம் என்பதே நம் பாரம்பரியம். விதிகள் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இணக்கமாக வாழ்வது மட்டுமே தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...