இந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய் பட்டேலின் தியாகம் நினைவு கூறப்படும்

இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய, இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் நாடுமுழுவதும்  நேற்று கொண்டாடப் பட்டது . இதனையடுத்து டெல்லியில் அமைந்துள்ள சர்தார் பட்டேல் சவுக்கில், வல்லபாய் பட்டேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர் மலர் தூவிமரியாதை செலுத்தினர். பின்னர் பிரதமர் மோடி டெல்லி தயான்சந்த் மைதானத்தில் ஒற்றுமைக்கான ஓட்டத்தைத் துவக்கிவைத்தார். இந்த ஓட்டத்தில் பொது மக்கள், அரசு அதிகாரிகள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஓட்டத்தை துவக்கிவைக்கம் முன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தஓட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் இளைஞர்களைப் பார்ப் பத்தில் மகிழ்சியாக இருப்பதாக தெரிவித்தார். இன்று சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்ததினம். இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னும், சுதந்திரம் அடைந்த பின்னரும் பட்டேல் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைத்து ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும் என்றார். ஏனெனில் இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அவர் அரும்பாடுபட்டார். அதனால்தான் அவரது பங்களிப்பை இன்றைய இளம் தலைமுறையினர் மதிக்கின்றனர் என்றார். ஆனால் சர்தார் படேலின் பங்களிப்பை புறக்கணிக்கவும், மறைக்கவும் முயற்சி நடைபெற்றதாக சாடினார். இந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய் பட்டேலின் தியாகம் நினைவு கூறப்படும் என்றார். பன்முகத் தன்மை கொண்ட நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்பில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...