சுதந்திர வரலாற்றை தெரிந்து கொல்வதன் வாயிலாக தேச பக்தியை வளர்த்தெடுப்போம்

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றிடும் விதமாக “என் மண் என் தேசம்” என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று தனது 103 வது மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் பட்டிதொட்டிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டும், மரக்கன்றுகள் சேகரிக்கப்பட்டும் அமுதக்கலச யாத்திரை மேற்கொள்ளப்பட இருக்கிறது நிறைவாக சேகரிக்கப்பட்ட மண் மற்றும் மரக்கன்றுகளை கொண்டு புதுடில்லியின் தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகே, ‘அமுதப்பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. தேசபக்தி மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்கான அடையாளங்களுள் ஒன்றாக இது இருக்க போவது உறுதி.

இதைப் போன்று நரேந்திர மோடி குஜராத் முதல்வராக அக்டோபர்-31-2013 அன்று, இந்திய விடுதலை இயக்க தலைவர்களில் ஒருவரும், முதல் உள்துறை அமைச்சரும், இந்திய சுதந்திரத்தின் போது இந்தியாவுடன் இணைய மறுத்து நாடு முழுவதும் சிதறி கிடந்த 500க்கும் அதிகமான சமஸ்தானங்களை இரும்பு கரம் கொண்டு இணைத்த இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்திட அடிக்கல் நாட்டினார். அதற்கு இந்திய ஒற்றுமை சிலை என பெயரிட்டு, நாடு முழுவதும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகளிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்தாத இரும்புக் கருவிகளை நன்கொடையாக பெற்று, அதை கொண்டு சிலை வடித்து பாரத பிரதமராக அக்டோபர்-31-2018 அன்று அதை திறந்தும் வைத்தார்.

அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலையம் எழுப்ப நாடு முழுவதிலுமிருந்துஜாதி, மதங்களை கடந்து செங்கல் பெறப்பட்டு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

தேசியமோ, தெய்வீகமோ எதுவாயினும் நாட்டின் நன்மைக்கு, வளர்ச்சிக்கு தேசிய ஒருமைப்பாடு மிக அவசியம் என்பதற்கான சான்றுகள் இவை. மத,ஜாதி, மொழி மற்றும் மாநிலங்களுக் இடையேயான பேதங்கள் மக்களை முக்கிய விஷயங்களில் இருந்து திசைதிருப்பி விடுகிறது. நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் அவர்களை அறியாமலேயே அவர்களை ஈடுபட செய்துவிடுகிறது. தேசம் முழுவதும் ஒரே மாதிரியான மனோபாவங்களை வளர்த்தெடுப்பதன் வாயிலாக மட்டுமே இதற்கு தீர்வு காண இயலும். அதை தேசபக்தியை வளர்ப்பதன் வாயிலாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறை தெரிந்து கொள்வதன் வாயிலாக மட்டுமே வென்றெடுக்க முடியும்.

நன்றி; தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும ...

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை நிர்மலா சீதாராமன் பதிலடி மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது'' என ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் சென்னை -பெங்களூர் விரைவுச்சாலை சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில்  இந்த ஆண்டு ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்தல் நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் ...

பசுமை நெடுஞ்சாலை திட்டம்

பசுமை நெடுஞ்சாலை திட்டம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் ...

2024-25 -ம் ஆண்டு பட்ஜெட் -அமித் ஷா பா ...

2024-25 -ம் ஆண்டு  பட்ஜெட் -அமித் ஷா பாராட்டு 2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட், மக்கள் நலனையும், வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டுள்ளதென மத்திய ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...