ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் குடிக்க வேண்டும். அதிகாலையில் நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் உடலில் வீரியம் கூடும்.
சூரிய வெப்பத் தாக்குதலில் இருந்து வெங்காயம் பாதுகாக்கிறது. காமாலை நோய்களுக்கும் காலையிலும் இரவிலும் வெங்காயம் சாப்பிடுவது நல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, கிருமிகளை அழிப்பதில் வெங்காயச் சாறு மிகவும் பயனுள்ளது.
குடல் கோளாறுகளுக்கு அருமருந்து. குடல்களில் தேங்கியிருக்கும் நச்சுக்களையும் நீக்கிவிடுகிறது. காற்றையும் குடல்களிருந்து வெளியேற்றுகிறது. வயிறு உப்பிசம், செரிமானமின்மைக்கும் வெங்காயம் அல்லது வெங்காயச் சாறு உட்கொண்டால் நல்ல பலன் கிட்டும்.
மூலநோயின்போது ஏற்பட்டிருக்கும் ரத்தப் போக்கை, வெங்காயச் சாருடன் சர்க்கரை கலந்து அருந்திப் போக்கிவிடலாம்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.