அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்தநிழலில் தலைவராக வரவில்லை

சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் பாஜக பொறுப்பாளர்களை நியமித் திருக்கிறது. மிகவெற்றிகரமாக பொறுப்பாளர்களை நியமித்த சிலதென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை பெரும்வெற்றிக்கு அடித்தளம் இடுவதாக அமையும்.

மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை தொடர்ந்து அளித்துவருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தமிழகத்திற்கு வந்த ஒரு நல்ல திட்டத்தைக்கூட சொல்ல இயலாது. ஆனால், இன்று பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொடுத்திருக்கிறார். கர்நாடகம் உறுப்பினர் பெயரை அறிவிக்கா விட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொல்லியிருக்கிறார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயற்கை சீரழிவு இல்லாமல்தான் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு சொல்லியிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்ட பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் உள்ள சில அரசியல்கட்சிகள் வேண்டுமென்றே மத்திய அரசை விமர்சனம் செய்கின்றன. அவர்களுக்கு நல்ல திட்டங்களை பாராட்டுவதற்கு மனமில்லை. ஆட்சிவேறு, கட்சி வேறு. ஆளுநரின் சுற்றுப் பயணத்தை திமுக அநாவசியமாக அரசியலாக்குகிறது. ஆளுநர் மிரட்டுவதாக சொல்கின்றனர். ஆளுநர் மிரட்ட வில்லை, இட்டுக் கட்டவில்லை. சட்டப்படி உள்ளதை அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அனுமதியில்லாத இடங்களில் போராடினால் கைது செய்யப் படுவார்கள். திமுக சட்டம் ஒழுங்கை பாதித்து குழப்பத்தை விளைவிப் பதற்காக போராட்டம் செய்கிறது. பலமுக்கிய பிரச்சினைகள் இருக்கும்போது இதனை வேண்டுமென்றே கையில் எடுத்திருக்கிறது திமுக.

பயங்கரவாதம் குறித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். மாவோயிஸ்டுகள் குறித்து அரசுக்கு தகவல் கிடைத்தால் அதனை அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இயக்குநர் கவுதமன் உள்ளிட்டவர்கள் பிரிவினைவாத பிண்ணனி உள்ளவர்கள். அவர்கள் யார், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என அறிந்ததால்தான் அவர்களை கைது செய்கிறது. இவர்களின் கைது வரவேற்கத்தக்கது. அவர்கள் நல்லதிட்டங்களை கொண்டுவர விட மாட்டார்கள்.

சேலத்தை தூத்துக்குடியாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களது திட்டம். அரசுகளை மக்களுக்கு எதிரான வர்களாக சித்தரிக்கின்றனர். பியூஸ் மானுஷ், கவுதமன், பாரதிராஜா ஆகியோர்தான் மக்களுக்கு நல்லது செய்வது போன்று மாயையை உருவாக்குகின்றனர். போராட்டங்கள் நடத்துவதில் தப்பில்லை. மக்களின் உயிரைவாங்கி விடுவதாக அந்த போராட்டங்கள் இருக்கக்கூடாது என்பதில் அக்கறை உள்ளது. இவர்கள் போன்றவர்களின் ஊடுருவலால்தான் தூத்துக்குடி போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது என்பது என் கருத்து.

நான் யாரையும் தரக் குறைவாக விமர்சித்ததில்லை. பாமக இளைனரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், என்னை தலைவராக இருக்க தகுதி இருக்கின்றதா எனக்கேட்கிறார். தான்மட்டும் அதிபுத்திசாலி, வேறு எந்தக் கட்சியிலும் புத்திசாலிகள் இல்லை என அவர் நினைக்கிறார். 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசியபண்பு இருப்பதால் தான் தேசியக்கட்சியின் தலைவராக வந்திருக்கிறேன். தகுதியில்லாமல் வரவில்லை. அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்தநிழலில் தலைவராக வரவில்லை. சுய உழைப்பில் தலைவராக வந்திருக்கிறேன்” என தமிழிசை தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...