யாத்திரையை திசை திருப்பும் திமுக

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்’ யாத்திரையை பொது மக்களிடமிருந்து திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

தில்லியில் பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில், அண்ணாமலையின் “என் மண் – என் மக்கள்’ யாத்திரை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பி. சுதாகர் ரெட்டி கூறியதாவது:

ராமேசுவரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி வைத்தார். பொது மக்களிடம் இருந்து கிடைக்கும் பெரும் அளவிலான வரவேற்பால் தற்போது இந்தயாத்திரை மக்கள் யாத்திரையாக மாறியுள்ளது.

அண்ணாமலை மேற்கொள்ளும் இந்தயாத்திரையால் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட திமுக, தமிழகமக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சநாதன தர்மம் இந்துமக்களின் வாழ்க்கை நெறி. உலக அளவில் பிரதமர் மோடியின் புகழையும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, சநாதன தர்மம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

“இந்தியா’ கூட்டணியில் திமுகவுடன் அங்கம்வகிக்கும் காங்கிரஸ் கட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், திமுகவையும் இந்தவிவகாரத்தில் கண்டிக்காதது ஏன் என்றார் பி. சுதாகர் ரெட்டி.

தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், “தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்படுத்திவருகிறார். இரண்டாம்கட்டத்தில் உள்ள அவரது “என் மண் என் மக்கள்’ யாத்திரை 55 சட்டப்பேரவைத் தொகுதிகளையும்,11 மக்களவைத் தொகுதிகளையும் அடைந்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்திய சமூக நலத்திட்டங்களால் தமிழகம் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது குறித்து 5 லட்சம் புத்தகங்களை தமிழகம்முழுவதும் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறோம். இந்தயாத்திரையில் கொண்டுசெல்லப்படும் புகார் பெட்டியில் திமுக மீது ஆயிரக்கணக்கில் மக்கள் ஊழல் புகார்களை அளிக்கின்றனர் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...