கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வை யிடுவதுக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் புதுக்கோட்டை , தஞ்சை மாவட்டங்களுக்கு வந்திருந்தார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், 'கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெருமளவு பாதிப்புக் குள்ளாகியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டையில் மிக அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் இறங்கி மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும்' பட்டிமன்றம் பேச, அரசியல் பேச இதுநேரமல்ல, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய நேரமாகும் என்று கூறினார்.
மத்திய அரசை பொறுத்தவ ரையில் அனைத்து தொண்டர்களும் மீட்புக்குழுவில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, முதலமைச்சரை நேரடியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கிவருவதாக கூறினார்.
பாரத்பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் மற்றும் பால்போன்ற பொருட்கள் அனுப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும், விமானப் படை மூலம் சேதங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் அவர், நூறு வருடங்களுக்கு தேவையான மரங்கள் கஜாபுயலினால் அழிந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
வேதனையான இந்த சூழ்நிலையில், அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும் திருநாவுக்கரசருக்கு சுட்டிக்காட்டினார்.
You must be logged in to post a comment.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
1stopping