வஞ்சக ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைத்த டில்லி மக்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
டில்லியில் பா.ஜ., 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வந்துள்ளது.டில்லியின் முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் டில்லியில் நடந்த கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
முன்பு இருந்த ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி வஞ்சக ஆட்சி, அதை மக்கள் நிராகரித்துவிட்டனர். அதன் செயல்பாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியின் அடிப்படையில், பா.ஜ.,வை தேர்ந்தெடுத்துள்ளனர். இதை செய்த டில்லி மக்களுக்கு நான் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.
டில்லியில் அமைந்துள்ள பா.ஜ., அரசு, நகரத்தை தூய்மையாகவும், அழகாகவும், வளமாகவும் மாற்றுவதன் மூலம் நகரத்தை உலகின் சிறந்த தலைநகராக மாற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |