உண்மை வெற்றி பெற்றுள்ளது

கோர்ட் தீர்ப்பு மூலம் அனைத்து குற்றச சாட்டுகளும் பொய்யாகியுள்ளது. ரபேல் அவசியத்தை தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது.  உண்மை என்றாவது வெளி வந்தே தீரும். பொய்க்கு ஆயுட்காலம் குறைவு. குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் அனைத்து வகையிலும் தோல்வியடைந்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒப்பந்தம் ஏன் இறுதி செய்யப்படவில்லை.

தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டது ஏன். காங்., ஆட்சியில் விமானப்படையில் தேவையை புறக்கணித்தது ஏன்? அனைத்து குற்றச்சாட்டுகளும் கற்பனையானது. இதன்மூலம் தேசிய பாதுகாப்பில் சமரசம்செய்ய முயன்றனர். ரபேல் ஒப்பந்தம் பாதுகாப்பு மற்றும் வணீகரீதியில் இந்திய நலன்களை பாதுகாக்கும். இறுதி செய்யப்பட்ட விலையானது, பேச்சு வார்த்தையின் போது கூறப்பட்ட விலையை விட குறைவு. ரபேல் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், எதிர்க் கட்சிகள் தயங்கி செல்வது ஏன். ஒப்பந்தத்தை மறு ஆய்வுகுறித்து கோர்ட் உத்தரவு மூலமே செய்ய முடியும். உண்மைக்கு ஒருமுகம் மட்டுமே இருக்கும். ஆனால், பொய்க்கு பல வடிவங்கள் உள்ளன. என்றார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

மத்திய பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:

ரபேல் விவகாரத்தில் தலையிட முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ரபேல் ஒப்பந்தத்தை மத்திய அரசு அனைத்து வழிகளையும் பின்பற்றி இறுதி செய்ததை நீதிமன்றம் அங்கிகரித்து உள்ளது. இந்த விவகாரத்தில் கோர்ட் நன்கு ஆராய்ந்து தீர்ப்புவழங்கியுள்ளது. மத்திய அரசின் முடிவை கோர்ட் ஏற்று கொண்டுள்ளது. விலை நிர்ணயத்தை கேள்விக்குள்ளாக வில்லை.

விமானங்களின் விலை குறித்த தகவலை சீல் வைத்த கவரில் கோர்ட்டில் அளித்தோம். விலைசரியாக உள்ளதாக நீதிபதிகள் கூறினர். ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் ஏற்றுகொண்டனர். வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என நீதபதிகள் தெளிவாக தெரிவித்தனர். வர்த்தகரீதியாக, மத்திய அரசு யாருக்கும் சாதமாக நடக்கவில்லை.டசால்ட் இந்தியாவில் தொழில் கூட்டாளியை தேர்வுசெய்வதில் தலையிடவில்லை. 36 போர் விமானங்கள் வாங்குவது குறித்து விமானப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவுசெய்யப்பட்டது..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...