கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, அதை ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இளஞ்சூடாக இருக்கும் போதே, இரவு படுக்கும்முன், அதை இரு கண்களையும் மூடிக் கொண்டு இரைப்பையின் மேல் நிறைய வைத்து, சுத்தமான வெள்ளைத் துணியைக் கொண்டு கட்டி, காலையில் எழுந்த பின் அவிழ்த்து பூக்களை எடுத்து விட்டுக் கண்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இந்த விதமாக மூன்று நாட்களுக்குக் கட்டினால் போதும். கண் எரிச்சல் சரியாகி விடும்.
நாற்பது எள்ளுப் பூ, மிளகு ஒன்பது, அரிசித் திப்பிலி இருபது, சம்பங்கி மொக்கு இருபத்தைந்து இவைகளை வெய்யிலில் போட்டுச் சருகு போலக் காயவைத்து, உரலில் போட்டு இடித்து, துணியில் சலித்து ஒரு சுத்தமான சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை மிளகளவு தூளைக் கண்களில் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். மருந்தைக் கண்களில் போட்டவுடன் எரியும். கண்ணீரை வடிய விட்டால் கண் எரிச்சல் தணிந்து விடும். தொடர்ந்து ஏழு நாட்கள் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.