இடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு

மேற்குவங்க காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன் திறந்துவைத்த பாலம் அதற்குள் இடிந்து விழுந்துவிட்டது என கூறும் பதிவு புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் லைக் செய்திருக்கிறார். இந்தபதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவுகளில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், இதுவும் வழக்கம் போல காங்கிரஸ் கட்சியின் மோடிக்கு எதிரான அவதூறு என்பதும் தெரிய வருகிறது.  புகைப்படத்தில் இடிந்து விழுந்ததாக கூறப்பட்ட பாலம் குஜராத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் திறக்கப்பட்டது ஆகும்.

மேற்குவங்க காங்கிஸ் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில்: நரேந்திர மோடி அறிவித்த திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டு பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ஜாம்நகர்-ஜூனாகர் நெடுங்சாலை பாலம், மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்து விட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலாகும் புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ்சர்ச் மூலம் தேடியதில், இந்த பாலம் ஜூன் 19 ஆம் தேதி இடிந்து விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தபாலத்தை மூன்று மாதங்களுக்கு முன் நரேந்திர மோடி திறந்துவைக்கவில்லை. வைரல் பதிவுகளில் கூறப்படும் இடிந்து விழுந்தபாலம் கட்டமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

இந்தபாலத்தை கட்டமைக்க கற்கள் அதிகளவு பயன்படுத்தப் படுகின்றன. இதுபோன்ற கட்டுமானங்களில் கற்களை பயன்படுத்தும் வழக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டது. தற்போதைய கட்டுமானங்களில் கான்க்ரீட்தான் பெரும்பாலும் பயன்படுத்த படுகின்றன.

அந்தவகையில் குஜராத் மாநிலத்தில் இடிந்துவிழுந்த பாலத்தை நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன் திறந்து வைக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...