மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். குழந்தைகளின் துயரமடைந்த குடும்பங்களுக்காக அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“மத்திய பிரதேச மாநிலம் சாகரில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”
“மத்திய பிரதேசத்தின் சாகரில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து இதயத்தை உடைக்கிறது. இதில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |