தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் கடந்தவாரம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். இதையடுத்து ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றவிழாவில் தெலங்கானா மாநில பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தர ராஜன் பதவியேற்று கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திராசிங் சவுகான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநராக பதவியேற்று கொண்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் பூங்கொத்துகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மேடையை விட்டு கீழேசென்ற தமிழிசை சவுந்தராஜன், தமது தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் காலில்விழுந்து வாழ்த்துபெற்றார். இவ்விழாவில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக் குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தெலங்கானா மாநில உயர் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...