கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது

புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட்வரி விகிதம் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு வரிசலுகைகளை அறிவித்தார். பொருளாதார மந்தநிலையால் இந்த சலுகைகளை அறிவித்தார்.

நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங் களுக்கும் கார்ப்பரேட் வரிகளை குறைக்க திட்டமிடப் பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுவரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும். கார்ப்பரேட்வரி அடிப்படையில் நாம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு  இணையாக இருக்கிறோம்.

வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, 2019-20 நிதியாண்டு ஏப்., 1 முதல் நடைமுறைக்குவரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் ஒருபுதிய சட்டபிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. எந்தவொரு உள்நாட்டு நிறுவனமும் 22 சதவீதம் என்ற விகிதத்தில் வருமானவரி செலுத்த அனுமதிக்கிறது. அவை எந்தவொரு ஊக்கத் தொகையும் விலக்குகளும் பெறாது.

மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அதிக முதலீடுகளைச்செய்ய விரும்புகிறோம். இதனால் பொருளாதாரம் வலுப்பெறும். நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வரும்வகையில் வருமான வரிச்சட்டத்தில் மற்றொரு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது அக்.,1க்கு பிறகு தொடங்கப்படும் எந்தவொரு புதிய உள்நாட்டு நிறுவனத்தையும் தொடங்குவதில் புதியமுதலீட்டுக்கு 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீத வரி மட்டும் செலுத்தினால் போதும்.

ஊக்கத்தொகை அல்லது விலக்குகளைத் தொடர்ந்துபெறும் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க, அவர்களுக்கு நாங்கள் குறைந்தபட்ச மாற்றுவரி (MAT) நிவாரணம் அளிக்கிறோம். தற்போதுள்ள வரி 17.01 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...