உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன்

‘உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக இருக்கிறது’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: உலக அளவில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. நமது கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்கிறோம். உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக இருக்கிறது. கோவிட் 19 தடுப்பூசி இந்தியா உருவாக்கிய போது, உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு வழங்கியது. 2013ம் ஆண்டில் 10வது பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. தற்போது 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 2047ம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அப்போது நமது சொந்த குடிமக்களுக்கு மட்டுமல்ல, உலக சமூகத்திற்கும் செழுமையை உருவாக்க முடியும். த்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போன்ற பல சவால்களுடன் இன்று உலகம் போராடுகிறது. பணவீக்கம், போர்கள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...