ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

 உடல் பொன்னிறமாக
ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு செய்து உண்ணலாம். நாளடைவில் தேஜஸ் உண்டாகும்.

நீர் வேட்கை தனிய வேண்டுமானால், ஆவாரம் பூவைத் தேவையானதை எடுத்து ஊற வைத்துக் குடிநீர் தயார் செய்து அருந்தலாம்.

இப்பூவை சமையலில் பக்குவப்படுத்திச் சாப்பிட கற்றாழை வாசனை, நீரிழிவு, உடம்பில் உப்புப் பூத்தல் வறட்சி சமப்படும்.

இதை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடம் இடலாம் குடி நீரிட்டுப் பால் சேர்த்துச் சாப்பிட உட்சூடு தணியும். இப் பூவுடன், பச்சைப் பயறு சேர்த்தரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

உடல் சூடு, மேகவெட்டை, துர்நாற்றம் நீங்க
தேவையான ஆவாரம் பூக்களைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து வெயிலில் உலர்த்திக் காய வைத்து எடுத்து இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு இத்தூளை மெல்லிய துணியில் போட்டு வடிகட்டி, வடிகட்டிய தூளைக் காய்ச்சிய பாலில் ஒரு தேக்கரண்டி போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தி வர உடலில் காணும் துர்நாற்றம், வியர்வை மற்றும் உடலின் வறட்சியையும் சோர்வையும் போக்கி வலிமையைத் தரும். இப்பூவுக்கு உடல் நிறத்தைத் தங்க நிறமாக மாற்றும் ஆற்றலுண்டு.

மஞ்சள்நிறப் பூப் பூத்து நம்மைக் கவர்ந்திழுக்கும் ஆவாரையின் மருத்துவக் குணம் காலம் காலமாகச் சிறந்த ஒன்றாகும்.

 

கிராமப்புறங்களில் இதன் இலை, பூ, காய்களைப் பறித்து வந்து இளம் வெய்யிலிலும், நிழலிலுமாக உலர்த்தி வற்றல் இட்டு வைத்துக் கொள்வார்கள். தயிரில் சிறிது உப்பிட்டு அதில் கொட்டி ஊற வைத்து மறுநாள் காலையில் அதை வெய்யிலில் வைத்து மீண்டும் இரவில், எஞ்சிய அதே தயிரில் கொட்டி வைத்து மறுநாள் மீண்டும் காய வைத்து இவ்விதமாகச் சுண்டைவற்றல், மோர் மிளகாய் இவற்றைத் தயாரிப்பது போலத் தயாரித்து வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிட ருசியாகவும் அதே நேரத்தில் சர்வ ரோகங்களையும், குறிப்பாக மேக சம்பந்தப்பட்ட நோய்களையும் ‘குறி’ சம்பந்தப்பட்ட நோய்களையும், நீரிழிவையும் குணப்படுத்தும் நல்ல மருந்துப் பொருளாகும்.

 

பூ, காய், மொட்டு இவைகளை உலர்த்தி வைத்துக் கொண்டு வேண்டுமளவு இட்டுக் கொதிக்க வைத்து இதனுடன் பனங்கற்கண்டு, பசும்பால் சேர்த்துப் பருகினால் சிறந்த பானமாகும்.

 

மொட்டு, பூ இவைகளை இட்டு அவியல் வைத்துச் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.

 

ஆவாரம்பூவைச் சுத்தம் செய்து பாசிப் பருப்புடன் சேர்த்துக் கூட்டுச் செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, சிறுநீருடன் இரத்தம் வெளியாதல், பெண்களைப் பொறுத்தவரையில் பெரும்பாடு போன்றவை குணமாகும்.

 

ஆவாரம் பூக்களை நிறைய அளவில் கொண்டு வந்து சுத்தம் செய்து வதக்கி கற்கண்டு சேர்த்து ஆட்டுக்கல்லில் அல்லது மிக்சியில் இட்டு நன்கு அரைத்துப் பின்னர் சுத்தமான புதிய தேன் கலந்து நன்கு பிசைந்து வெய்யிலில் இரண்டு தினங்கள் காய வைத்துப் புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் இரண்டு வேளை ஒரு தேக்கரண்டி அளவு உட்கொண்டு வந்தால் நீரிழிவு குணமாகும். நீர்க்க்கடுப்பு உட்சூடு இவை குணமாகும்.

 

இந்தப் பூவை நன்கு உலர்த்திப் பொடி செய்து கடலை மாவுடன் கலந்து தேய்த்துக் குளித்து வரக் கற்றாழை நாற்றம், தேகத்தில் உப்புப் படிதல் இவை குணமாகும்.

 

ஆவாரைச் செடியினுடைய பிசின் கிடைப்பது கஷ்டம். எறும்புகள் இந்தப் பிசினை விட்டு வைக்க மாட்டா. இந்தப் பிசின் கிடைத்தால் இதைச் சேர்த்து வைத்துக் கொண்டு, தினமும் நான்கு குன்றிமணி எடை எடுத்துப் பொடித்துப் பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்து அதனுடன் கலந்து ஒரு மண்டலம் உட்கொள்ள நீரிழிவு குணமாகும். தாது நஷ்டத்தை ஈடுகட்டும். ஆண்மை தன்மை பெருகும்.

 

ஆவாரம் பூவை பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை பொரியல் செய்து சாப்பிடலாம்.

 

இந்தப் பூவை உலர்த்திப் பொடி செய்து, மஞ்சள், சந்தனம், கோரைக்கிழங்கு இவைகளுடன் மூலிகை வாசனைப் பொருட்களையும் சேர்த்துக் குளிக்கும்போது தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

TAG; ஆவாரம் பூ, உடல் பொன்னிறமாக, ரிழிவு, உடம்பில் உப்புப் பூத்தல், உடல் சூடு, மேகவெட்டை, துர்நாற்றம் நீங்க, நீர் கடுப்பு, உட்சூடு, தோல் நோய், பூ, ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

 

One response to “ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முற ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...