கற்பழிப்பு காமுகர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

இந்தியாவில்  கடந்த சில காலமாகவே பெண்கள் கற்பழித்து கொலைசெய்யப்பட்டு வரும் சம்பம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு லாரி ஓட்டுநர் மற்றும் இரண்டுகிளீனர் என்று இரண்டு பெயரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பிரியங்கா இறப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்பாக தனது சகோதரியுடன் செல்போனில் அழுதபடி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது தான் மேலும் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்காரெட்டி (வயது 27) , கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவரது வீடு ஷாம் ஷாபாத் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் தினமும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி இரண்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பலாம் என்ற போது சுங்கச்சாவடி அருகே அவரது வாகனத்தின் டயர்பஞ்சரானது.

பின்னர் ப்ரியங்காவை சில ஆண்கள் பின்தொடர்ந்து உள்ளார்கள். இதனால் பயந்து போன பிரியங்கா தனது சகோதரிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுத்ததும், இன்னிக்கி நீ அலுவலகத்திற்கு சென்று விட்டாயா என்று சாகஜமாக கேட்க, ஆம், நான் சென்று விட்டேன், என்னிடம் சிறுது நேரம் பேசிகொண்டே இரு பின்னர் என்ன பிரச்சனை என்று சொல்கிறேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா. அதற்கு அவரது சகோதரி, ஏன் எதாவது விபத்தில் சிக்கிக் கொண்டாயா என்று கேட்க, நான் எனது வண்டியை சுங்கச்சாவடி அருகில் நிறுத்த அனுமதிக்காததால் என் வண்டியை புறவழி சாலையில் நிறுத்தினேன். தற்போது என் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். அதற்கு ப்ரியங்காவின் சகோதரி, வண்டியை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடு என்று கூற காலையில் எப்படி வண்டியை எடுப்பது என்று கேட்டு அங்கிருந்த கிளம்ப மறுத்துள்ளார் பிரியங்கா.

மெக்கானிக்கை வைத்து வண்டியை எடுத்துக் கொள்ளலாம் நீ முதலில் கிளம்பு என்று அவரது சகோதரிகூற, அப்போதுதான் அங்கே நடந்தவற்றை பிரியங்கா கூறியுள்ளார். இங்கே சில லாரி ஓட்டுனர்கள் இருக்கிறார்கள், அதில் ஒருவர் வண்டியை சரிசெய்வதாக கூறி வண்டியை எடுத்து சென்றார். பின்னர் சரி செய்து விட்டதாக கூறி வண்டியை விட்டார். ஆனால், வண்டி சரியாகவில்லை, எனக்கு மிகவும் பயமா இருக்கு. அதன்பின்னர் அங்கிருந்த ஆண்கள் வேறு ஒரு பையனை அனுப்பி வண்டியை சரி செய்து எடுத்து வருவதாக போனான். ஆனால், வண்டியை எடுத்து வராததால் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டதாக கூறியுள்ள பிரியங்கா, அவரை சிலர் பின் தொடர்வதாகவும் தனது சகோதரியிடம் கூறியுள்ளார்.

மேலும், என்னை பேய் மாதிரி பார்க்கிறார்கள் எனக்கு மிகவும் பயமா இருக்கிறது என்று தனது சகோதரியிடம் கூறியுள்ளார் பிரியங்கா. அதற்கு அவரது சகோதரியோ, தயவுசெய்து சுங்கச்சாவடிக்கு சென்றுவிடு அங்கே நிறைய பேர் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ப்ரியங்கா, அங்கே இருப்பவர்கள் என்னை மாதிரி பார்ப்பார்கள் என்று கூறிவிட்டு எனக்கு அழணும்போல இருக்கு, வண்டியை கொண்டுவரும் வரை என்னிடம் பேசி கொண்டே இரு என்று அழுதபடி பிரியங்கா கூறியுள்ளார். ஆனால், அவரது சகோதரியோ எனக்கு வேலை இருக்கிறது. நீ சுங்கச் சாவடிக்கு போ என்று கூற, இறுதியாக ஒரு 5 நிமிடம் பேசு என்று அழுதுள்ளார் பிரியங்கா. அதற்குள் நான் திரும்ப அழைக்கிறேன் என்று கூறிவிட்டு போனைதுண்டித்து உள்ளார் ப்ரியங்காவின் சகோதரி.

பின்னர் 9.45 மணிக்கு ப்ரியங்காவின் சகோதரி மீண்டும் அழைத்தபோது அவரது போன் ஸ்விச் ஆப் ஆகியுள்ளது. இதையடுத்து சுங்கச்சாவடிக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அங்கேயும் பிரியங்கா இல்லாததால் நள்ளிரவு 3 மணிக்கு போலீசில் புகார் அளித்துள்ளார்கள். பின்னர் காலை எறிந்த ப்ரியங்காவின் உடல் எறிந்த நிலையில் பலத்துக்குகீழ் கிடந்துள்ளது. பிரியங்காவை பின் தொடர்ந்தவர்கள்தான் அவரை கற்பழித்து கொலை செய்து விட்டதாகவிசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரவு 12 மணிக்கு ப்ரியங்காவின் உடலை போர்வையால் சுற்றி பின்னர் லாரியில் போட்டு எடுத்துசென்று பலத்திற்கு அடியில் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்கள் அந்த பிசாசுகள். மேலும், மாலை 6 மணி முதலே பிரியங்காவை நோட்டமிட்டு பின்னர் அவரது வண்டியை வேண்டுமென்றே பஞ்சர்செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ப்ரியங்காவின் இந்த மரணத்தால் இந்தியாவே அதிர்ந்து போய்யுள்ளது. மேலும், ப்ரியங்காவின் மரணத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள். பிரியங்காவின் கொலையை ஒட்டி சமூக வலைதளங்களில் #JUSTICEFORPRIYANKA என்ற ஹேஸ்டேக்கை பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய நபர்களை டேக் செய்தும் வருகிறார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...