மாணவரை தாக்கிய தி.மு.க- வினரை கைது செய்யவேண்டும் – அண்ணாமலை ஆவேசம்

சென்னை: ‘பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலையம் அருகில், பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரை, தி.மு.க.,வைச் சேர்ந்த நபரும், அவரது நண்பர்களும் கத்தியால் குத்தியும், கடுமையாக தாக்கியும், கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இது, அதிர்ச்சி அளிக்கிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விரைவில் நலம்பெற வேண்டும். தி.மு.க., அரசின் ஊழல் நிர்வாகம் காரணமாக, பழுதடைந்த சாலையில் சென்றபோது தவறி விழுந்த மாணவர், தி.மு.க.,வை விமர்சித்ததால், அக்கட்சியினர் அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர்.

தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வியை விமர்சித்தால், மாணவரைக்கூட கொலை செய்வோம் எனும் அளவுக்கு, தி.மு.க.,வினர் அதிகார மமதையில் இருக்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க., தொண்டர் என்ற பெயரில், இதுபோன்ற சமூக விரோதிகளை வளர்த்து விடுவது, சமூகத்துக்கு பேராபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.

உடனே, பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள், சமூகத்துக்கு என்றுமே அச்சுறுத்தலானவர்கள் என்பதை முதல்வர் உணர்ந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...