வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கலக்கி காலை வேளையில் 40 நாட்கள் கொடுத்துவர காசநோய் முழுமையாக குணமாகும்.
வாழையில் அனைத்துப் பொருட்களுமே பயன்பாடு பொருட்களாகும். இலை, பூ, தண்டு, காய், பட்டை என்று அத்தனையும் நல்ல மருந்துப் பொருளாகவும் திகழ்கின்றன.
திருமண வீடுகளிலும் திருவிழாக் காலங்களில் ஆலயங்களின் முகப்பிலும் அழகாகக் கட்டி வைக்கப்படுவதன் நோக்கம் மக்கள் நிறைய அளவில் கூடும் இடங்களானதால் காற்று மண்டலத்தைச் சுத்தம் செய்வதற்கே ஆகும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரத்தவாந்தி எடுப்பவர்களுக்கும் கிராணி மற்றும் நீரிழிவு நோய்களால் துன்புறுபவர்களுக்கும் மதிய உணவாக வாழைக் கச்சையைப் பயன்படுத்தலாம்.
இரத்தவிருத்திக்கு நன்கு முற்றிய வாழைக்காய் பெரிதும் உதவுகிறது. இரத்தக் கழிச்சல், வாயில் நீர் ஊறுதல் சூட்டு இருமல் இவை தணியும். வாழை பிஞ்சு பத்தியத்திற்கு நல்ல மருந்தாகும்.
பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டைக் குணப்படுத்த வாழைப்பூ நல்ல மருந்தாகும். வாழைப்பூவின் சாற்றில் கொஞ்சம் புளித்த பசுந்தயிரில் கலந்து உட்கொள்ள வேண்டும்.
பேயன்வாழைப்பழம் உடற்சூட்டைத் தணிப்பதில் சிறந்து விளங்குகிறது. நன்கு கனிந்த இந்தப் பழத்தின் உட்புற வெள்ளைத் தோலை உண்ணுவதன் மூலம் குடல்புண்ணைக் குணப்படுத்திவிடலாம்.
நீரிழிவைக்கூடக் கட்டுப்படுத்தும் தன்மை வாழைப்பழத்திற்கு உண்டு. அதிகப்படியான எடையைக் குறைப்பதற்கும் இந்தப் பழம் நல்ல மருந்தாகும்.
வாழை பட்டையைத் தணலில் வாட்டி பிழிந்தசாறு 100 மி.லி எடுத்து காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்துவர கடுப்புடனும், எரிச்சலுடனும் சிவந்தும் வரும் நீர்க்கடுப்பு நின்று குணமாகும்.
வாழைத்தண்டை சிறுதுண்டுகளாக்கிப் பொடித்து மோரில் சிறிது உப்பு சேர்த்து ஊறவைத்து வத்தலாக்கி எண்ணெயில் வறுத்து வெறும் வாயில் தின்றுவர கல் நீங்கி குணம் உண்டாகும்.
வாழை மட்டைச்சாறு 100 மி.லி தும்பை இலைச்சாறு 100 மி.லி கொடுக்க பாம்பு விஷம் முறியும். பாம்பு விஷம் அதிகமேறி பல் கட்டிக் கொண்டவர்களை வாழை பட்டையை கனமாக வெட்டிப்போட்டு படுக்க வைக்க சிறிது குணமாகும். இந்நிலையில் பல்லை நெம்பி வாயில் சாற்றை ஊற்றிவிட வேண்டும்.
மலச்சிக்கலை விரட்டி அடிக்கும். பித்த சம்பந்தமான வியாதிகளைத் தடுக்கும். அனலில் வாட்டிய எந்தக் காலத்துக்கும் ஏற்றது வாழைப்பழம். உடல் வளர்ச்சிக்கு அவசியமான எல்லாச் சத்துகளும் இதில் அடங்கி உள்ளன. உணவுக்குப்பதிலாக நாலைந்து வாழைப்பழம் சாப்பிட்டுப் பால் குடித்தால் போதும். வயிறு நிறைவதுடன் போதுமான சத்தும் கிடைத்துவிடும்.
ஒரு பெரிய வாழைப்பழம் 20 திராட்சை, 4 பேரீச்சம்பழம், 2 அத்திப்பழம், ஒரு சிறிய ஆப்பிள், ஒரு கோப்பை ஆரஞ்சுரசம் ஆகியவற்றுக்கு சமம்.
வழக்கமாக வாழைப்பழம் சாப்பிடுகிறவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகே உட்கொள்கிறார்கள்.
இது சரியல்ல, ஆகாரத்துக்கு முன் வாழைப்பழத்தை உட்கொண்டால் முழுப்பலனும் கிடைக்கும்.
குளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகள் நல்ல பலன் பெறமுடியும்.
வாழைப்பழத்துடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட ஆஷ்துமா, மூச்சுத்திணறல் நிற்கும்.
வாழைப்பழம் இனியசுவை உடையது. விதைகளற்றது. இதன் கடினமான தோல் பாக்டீரியாக்களுக்கும், தொற்றுகளுக்கும் எதிராக ஒரு பாதுகாப்பு உறையாக அமைந்திருக்கிறது.
மலைவாழை
மலச்சிக்கலைப் போக்கி இரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கல், மலத்தீச்சல் உடையோர் தினசரி இரவில் இரண்டு பெரிய பழங்களைச் சாப்பிட்டு பசும்பால் அருந்த உபாதை நீங்கும். குழந்தைகளுக்கும் இதனை ஒருபழம் வீதம் கொடுக்கலாம்.
நேந்திர வாழை
கேரள மாநிலத்தில் உற்பத்தியாவது. கண் உபாதைகளை நீக்கி பார்வையை ஒளிபெறச் செய்யும். நேத்திரம்(கண்) என்பது நேந்திரம் எனத் திரிந்து வந்திருக்கலாம்.
ரஷ்தாளி
குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. பசிமந்தம் ஏற்படுத்தும்.
பூவன் வாழை
பசியை உண்டுபண்ணும். அதிகம் உண்டால் பசியை அடக்கும். வாந்தி உண்டாக்கும்.
பேயன் வாழை
மலக்கட்டைப் போக்கும். உட்சுரம் தணிக்கும். திரிதோஷங்களால்(வாதம், பித்தம், சிலேத்துமம்) உண்டாகும் நோய்களைப் போக்கும். மேனியை அழகுறச் செய்யும், மூளையை ஆற்றல் மிக்கதாக்கும்.
வாழை ஊட்டச்சத்துடையது என்பதோடு வயிற்றையும் நிரம்பச் செய்வது ஆகும். கார்போஹைட்ரேட்டுகளுக்கு நல்ல மூலம் இது. எரிச்சல் நீக்கும், சக்தி அளிக்கும், பாலுணர்வை ஊக்குவிக்கும். வறட்டு இருமல் காரணமாக தொண்டையில் ஏற்படும் புண்ணை குணப்படுத்தும். சிறுநீர்ப்பையில் உண்டாகும் எரிச்சலைப் போக்கும்.
பழுத்தபழம் மிருதுவான மலமிளக்கி, உலர்ந்த பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாவுப் பொருள் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, ஈரல் கோளாறு மற்றும் இரப்பையில் ஏற்படும் புண்ணில் குணம் பெற உதவும்.
நீரிழிவு, பருமன், இருமல், ஜலதோஷம் மற்றும் அசீரணக் கோளாறு உள்ளவர்கள் வாழைப்பழத்தை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.
வயிற்றுக்கடுப்பு
வாழைப்பழத்துடன் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து உண்டால் வயிற்றுக் கடுப்பு தீரும். வாழைப்பழம், உப்பு மற்றும் புளி சேர்த்து உண்ண உபாதை வெகுவாகக்கட்டுப்படும்.
மூட்டுவலி, முழங்கால் வீக்கம்
இந்நிலைகளில் வாழைப்பழத்தை மட்டுமே தொடர்ந்து 3-4 நாட்கள் உணவாகக் கொள்ள பலன் கிடைக்கும். தினம் 8 அல்லது 9 வாழைப்பழங்களை மட்டுமே நோயாளி உண்ண வேண்டும். மற்ற உணவு வகைகளை உண்ணக் கூடாது.
சோகை
அயச்சத்து நிரம்பிய காரணத்தால் வாழைப்பழங்கள் இரத்த சோகைக்கான சிகிச்சையில் நல்ல பலன்களைக் கொடுக்கும். இரத்தத்தில் செவ்வணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
ஒவ்வாமை
சரும சினைப்பு, சீரணக்கோளாறு, ஆஷ்துமாவில் அவதிப்படுகிறவர்களுக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும். சிலருக்கு சில உணவுப் பொருட்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில் வாழைப்பழம் பயன் அளிக்கும். புரதம் செறிந்த மற்ற உணவுகளைப் போல் ஒவ்வாமைக்குக் காரணமாகும் அமினோ அமிலம் இதில் இல்லை. வாழைப்பழத்தில் உள்ளது அனுகூலம் செய்கிற அமினோ அமிலம் மட்டுமே.
சிறுநீரகக் கோளாறுகள்
வாழைப்பழத்தில் உள்ள குறைந்த அளவு புரதம், உப்பு மற்றும் உயர்ந்த அளவ கார்போஹைட்ரேட் காரணமாக இது சிறுநீரகக் கோளாறுகளில் பரிகாரம் காண உதவும். சிறுநீரக இயக்கத்தில் ஏற்படும் சிக்கல், இரத்தம் தேங்குவதால் ஏற்படும் நச்சுத்தன்மையைப் போக்கும். அந்நிலைகளில் 3-4 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் உணவாகக் கொண்டால் பலன் கிடைக்கும் சிறுநீரக வீக்கம் உட்பட எல்லா சிறுநீரகக் கோளாறுகளுக்கும் இந்தத் திட்ட உணவு பயன்படும்.
மாதவிடாய்க் கோளாறுகள்
சமைத்த வாழைப்பூவை தயிருடன் சேர்த்து உண்ண மாதவிடாய்க்கால வலி, மிதமிஞ்சிய இரத்தப் போக்கு கட்டுப்படும். வாழைப்பூ ப்ராஜெஷ்ட்ரோன் சுரப்பியை ஊக்குவிப்பதன் மூலம் மாதவிடாய்க்கால இரத்தப் போக்கைக் குறைக்கும்.
வாழைப்பழத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. குளிர்பதனப் பெட்டியின் தாழ்வெப்பநிலை பழங்களை முழுமையாய் பழுக்கவிடாமல் தடுத்துவிடும்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.