இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை

இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இந்திய வம்சாவழியினருக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கிலேயே குடியுரிமை சட்டம் திருத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றில் உள்ள சிறுபான்மையினர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அவர்கள், வேறு எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், அதன் காரணமாகவே அவர்களுக்கு அடைக்களம் கொடுக்கும் நோக்கில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்பதால்,அங்குள்ள முஸ்லிம்கள் மத ரீதியில் துன்புறுத்தப்பட வாய்ப்பு இல்லை என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழி செய்யும் என்று அவர் கூறினார். இந்த சட்டத்திருத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் குறித்து தெரிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், இலங்கைத் தமிழர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று குறிப்பிட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...