உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனதார வரவேற்கிறது

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்திற்கு வந்த அதிபர் டிரம்ப்பை.  வழி நெடுகிலும் ஏராளமான பொது மக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்றனர்.
சர்தார் பட்டேல் மைதானத்தில் .பிரதமர் மோடியும், டொனால்டு டிரமப்பும் மேடைக்குவந்தனர்.  நிகழ்ச்சி தொடங்கியது.பிரதமர் மோடி பேசியதாவது:-

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தால் நீங்கள் மனதார வரவேற்கப்படுகிறீர்கள். இது குஜராத் ஆனால் உங்களை வரவேற்பதில் முழுநாடும் உற்சாகமாக உள்ளது.

வரலாறு மீண்டும்மீண்டும் திரும்புவதை  இன்று நாம்காணலாம் என்று நினைக்கிறேன். 5 மாதங்களுக்கு முன்பு நான் எனது அமெரிக்க பயணத்தை ‘ஹவுடி மோடி’ உடன் தொடங்கினேன், இன்று எனதுநண்பர் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது இந்திய பயணத்தை ‘நமஸ்தே டிரம்ப்’ உடன் அகமதா பாத்தில் தொடங்குகிறார்.
இந்தநிகழ்வின் பெயரின் பொருள் – ‘நமஸ்தே’ மிகவும் ஆழமானது. இது உலகின் பழமையான மொழி சமஸ்கிருதத்தில் இருந்து வந்த ஒருசொல்.  இது   அந்த நபருக்கு மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கும் நாம் மரியாதை செலுத்து கிறோம் என்பதாகும்.
இந்திய-அமெரிக்க உறவுகள் இனி மற்றொருகூட்டு அல்ல. இது மிகபெரிய மற்றும் நெருக்கமான உறவு ஆகும். ஒருவர் ‘சுதந்திர சிலை’ பற்றி பெருமிதம்கொள்கிறார், மற்றவர் ‘ஒற்றுமை சிலை’ பற்றி பெருமிதம் கொள்கிறார்.
முதல்பெண்மணி மெலனியா, நீங்கள் இங்கு இருப்பது எங்களுக்கு ஒருமரியாதை ஆகும் . ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அமெரிக் காவுக்காக நீங்கள் செய்தபணி அதன் பலனைத்தருகிறது. குழந்தைகள் மற்றும் சமூகத்திற்காக நீங்கள் செய்த பணி பாராட்டத்தக்கது.
இருநாட்டு உறவுகளை இந்த நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்தியமக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும் என கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு அளித்து, அவர்கள் தங்களின் விருப்பங்களை ...

இந்தியாவின் முதல் விமான உற்பத் ...

இந்தியாவின் முதல் விமான உற்பத்தி ஆலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வதோதராவில் இந்தியாவின் முதல் விமான ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக உ ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக  உயர்த்தும் லக்பதி தீதிதிட்டம் பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...