டெல்லி வன்முறை செய்திகளை ஒளிபரப்பியதில், எல்லைமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் நியூஸ் ஒன் டிவி, என்ற இருமலையாள டிவி சேனல்களை, அடுத்த, 48 மணி நேரம் ஒளிபரப்புவதற்கு மத்தியசெய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இன்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன்டிவி ஆகிய இருசேனல்களும் செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி அடுத்த 48 மணி நேரத்துக்கு, 2 சேனல்களையும் ஒளிபரப்புவதற்கு, செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல், அந்த இருசேனல்களின் டிவி திரையும் கருப்பு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. மார்ச் 8ம் தேதி, இரவு 7.30 மணிக்கு மேல்தான் அவை தங்கள் ஒளிபரப்பை மீண்டும் துவக்கமுடியும்.
இந்த இருசேனல்களும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றும் ஒருசார்புடைய செய்திகளை ஒளிபரப்பியதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் டெல்லி காவல் துறையை இழிவுபடுத்தும் வகையில் செய்தி ஒளிபரப்பிய தாகவும், குற்றஞ் சாட்டியுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்ககூடிய பகுதிகளில்தான் வன்முறை நடந்துள்ளதாகவும், அந்தசேனல்கள் தங்களது செய்திகளில் கூறுகின்றன. கல் வீசுவது, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபடுவது போன்ற காட்சிகளையும் அந்தசேனல்கள் ஒளிபரப்பி உள்ளன. சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இந்தசெய்திகள் இருந்தன. இவ்வாறு அந்த உத்தரவில் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |