அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தாது விருத்தி செய்யும், சுரத்தையும், முத்தோட கோபத்தையும் போக்கும்.
இதன் இலையை பழுப்பாக எடுத்து நன்றாக எரித்துக் கரியாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தீப்பட்ட புண்களில் மயிலிறகால் தடவி வர இரணம் விரைவில் ஆறிப் போகும். இதன் இலையை, கொழுந்துடன் அரைத்து பாலில் அவித்து சர்க்கரைச் சேர்த்து உண்ண, சுரம், வாத, பித்த, சிலேத்துமரோகங்கள் போகும். சுக்கிலம் விருத்தியாகும்.
பட்டையை இடித்துப் பொடி செய்து துணியில் சலித்து, தேன் சேர்த்துக் கொடுக்க தீராத விக்கல் தீரும்.
பட்டைத் தூளில் 15 கிராம் அல்லது 30 கிராம் எடுத்து குடிநீர் செய்து கொடுக்க சொறி சிரங்குகள் குணமாகும். உடல் வெப்பம் குறையும். தூளைப் புண்களின்மேல் தூவ புண்கள் ஆறும்.
நன்னாரிப் பட்டை, அத்தி, அரசு, ஆல், இத்தி, நாவல் மரப்பட்டைகளை, சமனாக எடுத்து இடித்துக் குடிநீர் செய்து முறைப்படி 1 லிட்டர் நீர், நல்லஎண்ணெய் 1 லிட்டர், அதிமதுரம், சின்ன இலவங்கப் பட்டை, வெட்டி வேர், கோட்டம், சந்தனம் வகைக்கு 10 கிராம் எடுத்து பசும்பாலில் விட்டரைத்து மேற்படி குடிநீரில் சேர்த்து கலக்கித் தீயில் எரித்துப் பக்குவமாகத் தைலம் செய்து, சொறி, சிரங்குகள், கரப்பான் நோய்களுக்குத் தடவ விரைவில் குணமாகும்.
இம்மரத்தை ஆணியால் குத்தினால் பால் வரும். அதை எடுத்துக் காலில் உள்ள பித்த வெடிப்புக்குத் தடவ வெடிப்புகள் நீங்கிக் குணமாகும்.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.