ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களிடம், மன்னிப்பு கோருகிறேன்

உலகின்பல்வேறு நாடுகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், நம் நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தவைரஸ், மேலும் பரவாமல் தடுப்பதற்காகவே, 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.இந்த உத்தரவை பிறப்பித்ததற்காக, சிலர் என்மீது கோபமாக இருக்கலாம். ஊரடங்கு உத்தரவால், ஏழைசகோதர — சகோதரிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.’நம்மை இப்படி ஒருநெருக்கடியான நிலையில் பிரதமர் தள்ளி விட்டுவிட்டாரே’ என, அவர்கள் நினைக்கலாம்.ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களிடம், மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் மன்னிப் பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

அரசு அறிவித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால், மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்திக்கவேண்டியுள்ளது என்பதை அறிந்துள்ளேன். ஆனால், கொடியநோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு, இதைத்தவிர வேறு வழியில்லை.

நம் நாட்டில், 130 கோடி மக்கள் உள்ளனர். இவர்களை காப்பாற்றவேண்டிய கடமை எனக்கு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவது, வாழ்வா, சாவாபோராட்டம் போன்றது. கொரோனாவை கட்டுப் படுத்துவதற்கு ஊரடங்குதான் சிறந்தவழி என உலகமே சொல்கிறது. எனவே, நாட்டு மக்கள் ஒவ்வொருவரது பாதுகாப்பும் உறுதி செய்யப்படவேண்டும். அரசு அறிவித்து உள்ள கட்டுப்பாடுகளால் ஏதாவது அசவுகரியம் ஏற்பட்டிருந்தால், அதற்காக மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

‘எந்த ஒருபிரச்னையையும் துவக்கத்திலேயே கண்டறிந்து, அதை முளையிலேயே
கிள்ளியெறிய வேண்டும்’ என,நம் நாட்டில் பழமொழி உண்டு. கொரோனாவும் அப்படித்தான்;

இதை துவக்கத்திலேயே தடுக்கா விட்டால், பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிவதற்காக, சிலரை வீடுகளிலும், முகாம்களிலும் தனிமை படுத்தியுள்ளோம். இவர்களை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், மோசமாக கையாளுவதாக தகவல்கள் வருகின்றன; இதுமிகவும் கவலை அளிக்கிறது.

இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு மிகுந்த மனவேதனையை தருகின்றன; இது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை, நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக விலகலை பின்பற்ற வேண்டுமே தவிர, உணர்வு மற்றும் மனிதாபிமான ரீதியாக விலகிஇருப்பது சரியான செயல் அல்ல.கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அனைவரும் ஒருங்கிணைந்து இதை முறியடிக்கவேண்டும். அடுத்த பலநாட்களுக்கு, நாட்டுமக்கள், தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டும். தயவுசெய்து, ‘லட்சுமண ரேகை’யை தாண்ட வேண்டாம்.

விதி முறைகளை மீறி, சிலர், வீதிகளில் நடமாடுவதாக தகவல்கள் வருகின்றன. பிரச்னையின் தீவிரத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறவேண்டாம். விதிமுறைகளை மீறினால், கொரோனா வைரசிடமிருந்து, நம்மை பாதுகாப்பது கடினம்.உலகின் பல்வேறு நாடுகளில், ‘கொரோனா என்னை பாதிக்காது’ எனகூறி கிண்டலடித்தவர்கள் எல்லாம், இப்போது எவ்வளவு வருந்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். பலரதுவாழ்க்கையே பறிபோய்விட்டது.

இந்த நெருக்கடியான நேரத்தில், நாட்டு மக்களின் அன்றாடவாழ்வு சுமுகமாக இருப்பதற்காக, எலெக்ட்ரீஷியன், மளிகைகடை உரிமையாளர்கள், தொலை தொடர்புசேவை வழங்குவோர் கடுமையாக உழைக்கின்றனர். அவர்கள், ‘ஹீரோ’க்களாக உருவெடுத்துள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில், நாடுமுழுவதும் உள்ள டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போர் வீரர்களைப் போல் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பாராட்ட, வார்த்தைகள் இல்லை.

இவர்களது நலனும் முக்கியமானது. இதை கருத்தில் வைத்துத்தான், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ள, 20 லட்சம்பேருக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு அறிவிக்கப் பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவால் வீடுகளுக்குள் இருக்கும் மக்கள், தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். பழைய பொழுது போக்குகளை மேற்கொள்வது, பழைய நண்பர்களை தொடர்புகொண்டு பேசுவதற்காக, இந்த நேரத்தை பயன்படுத்தலாம்.

மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...