பிரதமர் நரேந்திர மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
தென் கொரிய குடியரசுக்கு தான் சென்றவருடம் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் நட்புறவை குறித்து தனது திருப்தியை தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றுகுறித்தும், அது உலகசுகாதார கட்டமைப்புக்கும் பொருளாதார நிலைமைக்கும் ஏற்படுத்தியுள்ள சவால்கள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர். பெரும்தொற்றை கட்டுப்படுத்த தங்களது நாடுகளில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
இந்தசிக்கலை எதிர் கொள்வதற்கு தொழில்நுட்பம் சார்ந்த பதில் நடவடிக்கையை எடுத்ததற்தாக தென்கொரிய குடியரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் பெரும் மக்கள் தொகையை ஒற்றுமை உணர்வோடு இந்தபெரும் தொற்றை எதிர்த்து போராடுவதற்காக ஊக்கப் படுத்தியதற்காக இந்திய அதிகாரிகளை அதிபர் மூன் ஜே-இன் பாராட்டினார்.
இந்தியாவிலுள்ள கொரியமக்களுக்கு இந்திய அதிகாரிகள் அளித்துவரும் ஆதரவுக்காக பிரதமருக்கு அதிபர் நன்றி தெரிவித்தார்.
இந்திய நிறுவனங்களால் வாங்கப் பட்டு வரும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் விநியோகங்களை ஆதரிப்பதற்காக கொரிய குடியரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
தங்கள் நாடுகளின் வல்லுநர்கள், கோவிட்-19க்கான தீர்வுகளை ஆய்வுசெய்யும் போது, ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து தொடர்பு கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள் என இருதலைவர்களும் ஒத்துக்கொண்டனர்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |