இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இருப்பது என்பது, ஜனநாயகத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை காட்டுகிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிககோ, ஜாம்பியா அதிபர் ஹகைன்டே ஹிசிலிமா, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே மற்றும் தென் கொரிய அதிபர் யுன் சக் இணைந்து நடத்திய ஜனநாயகம் தொடர்பான மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மிகப் பெரிய வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இது ஜன நாயகத்திற்கும், உலகத்திற்கும் சிறந்த எடுத்து காட்டாக உள்ளது. ஜனநாயகத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை காட்டுகிறது.
தங்களது தலைவரை மக்கள் தேர்வுசெய்ய வேண்டும் என்பது, உலக நாடுகளில் வருவதற்கு முன்னரே, பழங்கால இந்தியாவில் வழக்கத்தில் இருந்துள்ளது. மகாபாரதத்தின்படி, குடிமகனின் முதல் கடமை, தங்களது தலைவரை தேர்வுசெய்வது எனக்கூறப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவதைப்பற்றி நமது புனித வேதங்கள் பேசுகின்றன.இந்தியா உண்மையில் ஜனநாயகத்தின்தாய். ஜனநாயகம் என்பது கட்டமைப்பல்ல. அது இந்தியாவிற்கு ஆன்மாவாகவும் உள்ளது. ஒவ்வொரு மனிதனின் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் அனைத்தும் ஒரேமாதிரியான முக்கியத்துவம் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது.
வாழ்க்கைமுறை மாற்றம் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, சேமிப்புமூலம் தண்ணீரை பாதுகாப்பது, அனைவருக்கும் சுத்தமான சமையல் எரிவாயு வழங்குவது என அனைத்து நடவடிக்கைகளும், மக்களின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக மேற்கொள்ளப் படுகிறது.
கோவிட் காலகட்டத்தில் இந்தியாவின் கடமைகளானது மக்களால் கட்டமைக்கப் பட்டது. இந்தியாவின் தடுப்பூசி கொள்கையும், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம் ‘ என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |