காங்கிரஸில் இருந்து ஜெகன்மோகன்ரெட்டி விலகியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கொடும்பாவி மற்றும் படங்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சித்தூர், அனந்தபூர், விஜயவாடா போன்ற இடங்களிலில் காங்கிரஸ் அலுவலங்கள் தாக்குதலுக்குள்ளாகின. மேலும் பல இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு எதிரே போராட்டங்கள் நடைபெற்றன
ராஜசேகர ரெட்டியினால் காங்கிரஸ் கோட்டையாக மாற்றபட்ட கடப்பா மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நேற்று காலை நுழைந்த ஜெகன் ஆதரவாளர்கள். அங்கிருந்த பொருள்களையும், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர் , சோனியா காந்தியின் படங்களை அவர்கள் கிழித்து எரிந்தனர்.
இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய ஜெகன்மோகன்ரெட்டி,
எனது தந்தையின் மறைவுக்கு பின் கட்சி என்னை அவமதிக்க தொடங்கியது. ரோசையாவை முதல்வராக ஆக்கியதை நான் எப்போதும் எதிர்த்தது இல்லை . ஆனால் நான் எதிர்ப்பது போன்ற பிரமையை உருவாக்கினார்கள். தொடர்ந்து காங்கிரஸ்-மேலிடம் என்னை புறக்கணித்து வந்தது. சோனியாவை சந்திக்க தொடர்ந்து பல முறை முயன்றும் எனக்கு நேரம் ஒதுக்கபடவில்லை.
அத்துடன் எனது குடும்பத்துக்கு உள்ளேயே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்தனர். இந்த காரணங்களால் தான் காங்கிரசில் இருந்து விலகினேன் யான கூறினார்.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.