பார்லிமென்ட் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் காங்கிரஸ் சீர்குலைத்தது. இதற்காக, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
நாக்பூரில் முதல்வர் பட்னாவிஸ் அளித்த பேட்டி:
அம்பேத்கர் குறித்து அமித் ஷா கூறிய கருத்துக்களை எடிட் செய்து வீடியோக்களை பகிர்ந்து, காங்கிரஸ் அரசியல் செய்கிறது.பார்லிமென்ட கூட்டத்தொடரை நடத்தவிடாமல் சீர்குலைத்தது. இதற்காக, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் தனது உரையின் போது, அரசியல் சட்டத்தை காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அவமதித்ததை அம்பலப்படுத்தினார்.
அரசியலமைப்பை தொடர்ந்து அவமதித்ததற்காக, தங்கள் தலைவர்களை பிரதமர் மோடி அம்பலப்படுத்தியதால்,காங்கிரஸ்
விரக்தியுடன் செயல்படுகிறது, ஏனெனில் அதன் தலைவர்கள், நேரு முதல் ராகுல் வரை, அரசியலமைப்பை அவமதித்தனர். இட ஒதுக்கீட்டை மறுத்தனர். இதே காங்கிரஸ்தான் அம்பேத்கரை தொடர்ந்து அவமதித்து வருகிறது.
இவ்வாறு முதல்வர் பட்னாவிஸ் கூறினார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |