இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதம்: ரிசர்வ் வங்கி கணிப்பு

2021 – 22ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை கவனித்து வருகிறோம். நாட்டில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்துவருகிறோம் . பொருளாதார இழப்புகள் தொடர்பாக பல்வேறு துறையை சேர்ந்தவர்களிடம் கருத்துகளை கேட்டறிகிறோம். கொரோனாவுக்கு எதிரானபோருக்கு ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதே மிகப்பெரிய நோக்கம்.

வைரஸ் காரணமாக, தற்போது, மிக பெரிய பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது.ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவிவருகிறது. மார்ச் மாதம் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஆட்டோமொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதம் குறைந்துள்ளது கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்தியாவில், அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால், தட்டுப்பாடு ஏற்படாது. இந்தாண்டு நெல்பயிரிடப்படும் அளவு 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

2021-22 ல் பொருளாதார வளர்ச்சி 7.4 % ஆக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் என ஐஎம்எப் கணித்துள்ளது. இது ஜி- 20 நாடுகளில் வளர்ச்சி அதிகம்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் ஜிடிபி வளர்ச்சியில் கணிசமாக அதிகரித்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொரோனாவால், தொழிற்சாலைகள் இயங்காததால், மின் தேவை, 20 சதவீதம் – 25 சதவீதம் குறைந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையிலும், வங்கிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. தட்டுப்பாடு கூடாது என்பதற்காக வங்கிகளுக்கு போதிய அளவு ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப் பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன்வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிசர்வ் வட்டி வகிதம் 4% ல் இருந்து 3.75 % ஆக குறைக்கப் பட்டுள்ளது. மாநில அரசுகள் கூடுதல் கடன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு ரிசர்வ் வங்கியிடம் 60 சதவீத கடனை மாநில அரசுகள் பெற்றுகொள்ளலாம். வாராக்கடன் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பண வீக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மும்பையில் அவர் செய்சியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்…

* 2021-22 ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிப்பு.

* நாட்டில் பணப் புழக்கம் சீரான நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

* ரிவர்ஸ் ரெப்போவட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைப்பு.

* ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும்.

* நபார்டு, சிட்பி, என்.ஹெச்.பி வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம்கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு.

* விவசாயம், சிறுகுறு தொழில் கடன்வழங்க சிறப்பு நிதி ரூ.50 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படும்.

* வங்கிகள் தாராளமாக கடன்கொடுக்க அறிவுறுத்தபட்டுள்ளது.

*  ஜப்பான், ஜெர்மனியின் ஒட்டுமொத்த பொருளாதார அளவிற்கு உலகம் முழுவதும் சரிவு இருக்கும். ஜி-20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் அதிகரிக்கும் என உலக பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியகம் கணித்துள்ளது.

* இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது; இது ஜி-20 நாடுகளில் அதிகம்.

* சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*  மாநிலங்களுக்கு 60 சதவீதம் கூடுதலாக நிதி உதவி . அதாவது அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம்.

* இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது.

*  பங்குச் சந்தை தங்குதடையின்றி செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

*  நாட்டில் பணப்புழக்கம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...