2025ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என ஐ.நா., கணித்துள்ளது.
இது தொடர்பாக, 2025ம் ஆண்டுக்கான ஐ.நா.,வின் உலகப் பொருளாதார சூழல் அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025ல் தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும்.
இந்தியாவின் பொருளாதாரம் தெற்காசிய பிராந்தியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். சேவைகள், சரக்கு ஏற்றுமதி, மருந்து உற்பத்தி இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும்.
2026ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறையின் விரிவாக்கமும், இந்திய பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும். தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, பூடான், நேபாளம், இலங்கை போன்ற சில நாடுகளின் பொருளாதார மீட்சி ஆகியவை அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |