நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை

சென்னையில் கொரோனா தொற்றுக்கு முதன் முதலாக டாக்டர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரதுஉடலை சென்னையில் உள்ள சுடுகாட்டில் தகனம்செய்ய சென்றபோது அங்கு மக்கள் திரண்டிருந்து தகனம்செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

டாக்டரின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்களை கற்களைவீசி தாக்கினார்கள். அவர்களிடம் போலீசார் சுமூக பேச்சு நடத்தினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த டாக்டரின் நண்பர் பரதீப்குமார் என்ற டாக்டர் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

இந்த கடிதத்தை கண்ணீருடனும், ரத்தத்திலும் எழுதுகிறேன். கண்ணுக்குதெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்துபோராடும் ஒவ்வொரு டாக்டருக்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த எதிரியை எந்த குண்டுகளினாலும், புல்லட்களினாலும், ஏவுகணைகளினாலும் கொல்லமுடியாது.

நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை. நாங்களும், உங்களை போன்றவர்கள்தான். இதனை தற்போது நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் அனைவரும் எங்களை தாக்கியுள்ளீர்கள். மிகவும் காயப்படுத்தி யுள்ளீர்கள். அப்போது டாக்டர்களுக்கு ரத்தம் வருவதை பார்த்திருப்பீர்கள். நாங்களும் உங்களை போன்றவர்கள்தான்.

தாக்குதல்

எங்கள் நரம்பியல் டாக்டர் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரில் உயிர்தியாகம் செய்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டுசென்ற போது 50க்கும் மேற்பட்ட மக்கள் எங்களை குச்சியாலும் கற்களாலும் தாக்கினீர்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், மாநகராட்சி சுகாதார ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது. உண்மையில் இதனைபெற நாங்கள் தகுதியானவர்களா? நம்மில் எவருக்கும் இதுநடக்கலாம் என நீங்கள் நினைக்க வில்லையா? அனைத்து டாக்டர்களும் மருத்துவமனையை மூடிவிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் எங்கு சிகிச்சைக்கு செல்வீர்கள்?

மனிதநேயம் இறந்துவிட்டது

உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உங்கள்மகன் அல்லது மகள், கணவன், மனைவி, பெற்றோர்கள் கூட அருகில் வரமாட்டார்கள். உங்களை தொடமாட்டார்கள். இது உண்மை. ஆனால் நாங்கள் உங்களை கவனித்து கொள்வோம். சிகிச்சை அளிப்போம். இதுபோன்று சமூகமாக இதனை நீங்கள் எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். மனிதநேயம் இறந்து விட்டது. அது புத்துயிர் பெறவேண்டும். உங்களுக்கு நாங்கள் வேண்டும். தயவுசெய்து எங்களை தாக்க வேண்டாம். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...