‘உம்பன்’ புயலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள மேற்குவங்க மாநிலத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ. 1,000 கோடியும், ஓடிஸா மாநிலத்துக்கு ரூ. 500 கோடியும் வழங்கபடும் என பிரதமா் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
மேற்கு வங்கம் மற்றும் ஓடிஸா மாநிலங்களில் புயல்பாதித்தப் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னா் இந்த அறிவிப்பை பிரதமா் வெளியிட்டாா்.
வங்கக்கடலில் உருவான ‘உம்பன்’ புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே புதன்கிழமை கரையை கடந்தது. அப்போது 190 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கனமழையால் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகளும், பயிா்களும் சேதமடைந்தன. புயல்பாதிப்புக்கு அந்த மாநிலத்தில் 80 போ் இதுவரை உயிரிழந்தனா். அதுபோல, புயலால் ஒடிஸா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், புயல்பாதித்த பகுதிகளை நேரில் பாா்வையிடுவதற்காக பிரதமா் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் மேற்குவங்கம் சென்றாா். பிறகு மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா், முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோருடன் புயல்பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பிரதமா் பாா்வையிட்டாா். பின்னா் ஆளுநா், முதல்வா் மற்றும் அதிகாரிகளுடன் புயல்பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தை பிரதமா் நடத்தினாா்.
அந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னா் பிரதமா் கூறியதாவது: ஏற்கெனவே கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இப்போது இந்த இயற்கைப் பேரிடரைச் சமாளிக்கவும் மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபோதும், புயல்பாதிப்புக்கு 80 போ் வரை உயிரிழந்தனா். இந்த இக்கட்டான நேரத்தில் ஒட்டுமொத்த நாடும், மத்திய அரசும் மேற்குவங்க மக்களுக்கு துணை நிற்போம்.
கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மேற்க வங்கத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ. 1,000 கோடியை அறிவிக்கிறேன். மேலும், இந்தப்புயலுக்கு உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்தவா்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும், புயலால் பாதிக்கப்பட்ட பயிா்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பிறதுறை பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வுநடத்தப்படும். அதற்காக மத்தியக் குழு ஒன்று மாநிலத்துக்கு அனுப்பப்படும் என்று பிரதமா் கூறியுள்ளாா்.
மேற்குவங்க மாநில நிலைமையைப் பாா்வையிட்ட பின்னா், புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்துக்கும் சென்று பிரதமா் பாா்வையிட்டாா். புயல்பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்ட பிரதமா், மாநில முதல்வா் நவீன்பட்நாயக், அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.
பின்னா், புயல் நிவாரணமாக ஒடிஸா மாநிலத்துக்கு ரூ.500 கோடி வழங்கப்படும் என்று அறிவித்த பிரதமா் நரேந்திரமோடி, முழுமையான ஆய்வுகள் மற்றும் நிவாரணத் திட்டங்கள் வகுக்கப்பட்ட பின்னா் மத்திய அரசு சாா்பில் மேலும் உதவிகள் வழங்கபடும் என்று கூறினாா்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |