நாட்டை வளா்ச்சி அடையச் செய்வதற்கு வலுவான போக்கு வரத்து அவசியம்

உலகின் நீண்ட நதி நீா் போக்குவரத்து வசதியைத் தொடக்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, நாட்டை வளா்ச்சி அடையச் செய்வதற்கு வலுவான போக்கு வரத்துவசதிகள் அவசியம் என்றாா்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கும் அஸ்ஸாமின் திப்ரூகருக்கும் இடையே சுமாா் 3,200 கி.மீ. தொலைவுக்கு பயணம் மேற்கொள்ளும் ‘எம்வி கங்கா விலாஸ்’ என்ற பயணிகள் கப்பலின் சேவையை பிரதமா் மோடி வெள்ளிக் கிழமை காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தாா்.

இரு நகரங்களுக்கு இடையேயான பயணத்தை 51 நாள்களுக்கு அக்கப்பல் மேற்கொள்ளும். வழியில் 27 நதிகளை அக்கப்பல் கடக்கும். உத்தரபிரதேசம், பிகாா், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைக் கடந்து வங்க தேசத்துக்குள் நுழைந்து பின்னா் அஸ்ஸாமின் திப்ரூகா் நகரை அக்கப்பல் அடையும்.

அத்துடன் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் அமைக்கப் பட்டுள்ள கூடார நகரத்தையும் (டென்ட் சிட்டி) பிரதமா் மோடி காணொலி வாயிலாகத் திறந்துவைத்தாா். சுற்றுலா பயணிகளைக் கவரும் நோக்கில் நூற்றுக்கணக்கான கூடாரங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் உள்நாட்டு நீா்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சுமாா் ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

உலகின் நீண்ட நதிநீா் போக்கு வரத்து வசதி காசிக்கும் திப்ரூகருக்கும் இடையே இப்போது தொடக்கி வைக்கப் பட்டுள்ளது. இது வடக்கு இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை சா்வதேசளவில் பிரபலப்படுத்த உதவும். இது மிகப்பெரிய திருப்பு முனையாக அமைவதோடு நாட்டில் சுற்றுலாவுக்கான புதிய அத்தியா யத்தையும் தொடக்கும். நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த உதவுவதோடு புதிய வேலை வாய்ப்புகளையும் இத்திட்டம் உருவாக்கும்.

இந்தியா்களின் வாழ்வில் கங்கை நதி மிக முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு கங்கை நதி கரைப் பகுதிகளில் வளா்ச்சிப்பணிகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்பட வில்லை. அதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் அங்கிருந்து வெளியேறினா். இந்தப் பிரச்னைக்கு இருவழிகளில் தீா்வு காணப்பட்டது. முதலில் தூய்மைகங்கை திட்டத்தின் வாயிலாக கங்கை நதி தூய்மைப்படுத்தப்பட்டது. மற்றொரு புறம் கங்கை நதியைச் சாா்ந்த பொருளாதார நடவடிக்கைகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கங்கை நதி பாயும் மாநிலங்கள் அனைத்தும் பலனடைந்தன.

 

நாட்டை வளா்ச்சி யடையச் செய்வதற்கு வலுவான போக்கு வரத்து வசதிகள் அவசியம். நாட்டில் வா்த்தகம், சுற்றுலா ஆகிய துறைகளை மேம்படுத்து வதற்கு நதிகள் முக்கியபங்கு வகிக்கும். வரலாற்று ரீதியில் இந்தியாவில் நதி நீா்ப் போக்குவரத்து அதிகமாகப் பயன் படுத்தப் பட்டுள்ளது.

ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நதிநீா்ப் போக்குவரத்தை அதிகரிப் பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டது. நதிநீா் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்த தனிச் சட்டங்களும் விரிவான செயல் திட்டங்களும் வகுக்கப்பட்டன.

நாட்டில் 2014-ஆம் ஆண்டில் 5 தேசிய நீா் வழித் தடங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அது 111-ஆக அதிகரித்துள்ளது. அதில் சுமாா் 25 வழித் தடங்கள் பயன் பாட்டுக்கு வந்துவிட்டன. 8 ஆண்டுகளுக்கு முன் நதி நீா் வழியான சரக்குப் போக்குவரத்து 30 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. தற்போது அது 3 மடங்கு அதிகரித்துள்ளது.

துறைமுகம் சாா்ந்த வளா்ச்சியை ஊக்குவிப் பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் 125 நதிகளில் சரக்கு, பயணிகள் கப்பல் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. நாட்டின் மற்ற பகுதிகளில் கப்பல்சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...