”கொரோனாவால் நமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை, ஒருவாய்ப்பாக பயன்படுத்தி, திருப்பு முனையாக மாற்ற வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின், 95வது மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை, டில்லியில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக துவக்கிவைத்து, பிரதமர் மோடி கூறியதாவது:
கொரோனாவை எதிர்த்து, உலகநாடுகள் போராடி வருகின்றன; இந்தியாவும் போராடுகிறது. கொரோனா நெருக்கடிக்கு இடையே, நாம் மேலும்பல பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகிறோம். புயல், கனமழை, வெள்ளம், வெட்டுக் கிளி, எண்ணெய் கிணற்றில் தீ, நில அதிர்வு போன்ற பிரச்னைகளையும், நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதுபோன்ற பேரிடர்களை, வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம், நமக்கு புதியநம்பிக்கையை அளிக்கிறது.’
பல்வேறு சவால்களுக்கு இடையில் பணியாற்றுபவர்கள், புதியவாய்ப்புகளை பெறுகின்றனர். ஒற்றுமையும், வலிமையும்தான், அந்த சவால்களை சந்திப்பதற்கு, நம்மிடம் உள்ள உற்சாக மருந்து.தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை, நாம் ஒவ்வொருவரும், அரியவாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம், நாட்டில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்.அந்த திருப்புமுனை, ‘தற்சார்பு இந்தியா!’ தற்போது, நாம் பலபொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம். அவற்றை எப்போது, இந்தியாவிலேயே தயாரிக்க போகிறோம்; அவற்றை, நாம் எப்போது ஏற்றுமதி செய்ய போகிறோம் !இந்த உணர்வுடன், அதற்கான திசையில், நாம் அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன், சுவாமிவிவேகானந்தர், ‘இந்தியர்கள் அனைவரும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன் படுத்த வேண்டும். வெளிநாடுகளில், இந்தியப் பொருட்களுக்கான சந்தையை ஏற்படுத்த வேண்டும்’ என்றார். கொரோனாவிற்கு பிந்தைய உலகில், விவேகானந்தர் காட்டியபாதை, இந்தியாவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.உற்பத்தி துறையில், மேற்கு வங்கத்தின் வரலாற்று சிறப்புகளை நாம் புதுப்பிக்கவேண்டும். ‘வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ, அதை நாளை இந்தியா நினைக்கும்’ எனக் கூறப்படுவதை கேட்டிருப்போம். இதை முன் மாதிரியாக கொண்டு, நாம் இணைந்து முன்னேறுவோம்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக, இந்தியாவில் பிரசாரம் நடந்து வருகிறது. இதன் மூலம், மேற்குவங்கம் பெரிய பயனடையும். சணல் வணிகம் வளர்ச்சி பெறும். இவ்வாறு, பிரதமர் கூறினார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |