”அடுத்த, 1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலான, நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள், கொள்கைகளை உருவாக்கி வருகிறோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சிவில் சர்வீசஸ் எனப்படும், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தொழில்மயமாவது, தொழில் முனைவோர் உருவாவதன் வேகத்தை குறைக்கும் வகையில் செயல்படுவதாக முன்பு பேச்சு இருந்தது.
இந்த அதிகாரிகள், சட்டத்தை வைத்துக் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர் என்று கூறப்பட்டது.
அதே நேரத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகள் மிக வேகமாகவும், அதிகமாகவும் உள்ளன.
அவற்றை நிறைவேற்றுவதில் அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.
பழைய நடைமுறைகளை வைத்து, நம்முடைய நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகள் இருந்தால், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது. இதன்படியே, பல நிர்வாக சீர்திருத்தங்களை, 11 ஆண்டுகளில் மேற்கொண்டோம்.
அனைத்து வகை தொழில்நுட்ப வாய்ப்புகளையும் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சியை உருவாக்கிட அதிகாரிகள் உட்பட அனைவரும் முன் வர வேண்டும்.
வரும், 2047ல் வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்குடன் உள்ளோம். அதற்கு முன்பாக, மூன்றாவது பெரிய பொருளாதாரம் என, பல துறைகளிலும் நமக்கு மிகப் பெரிய இலக்குகள் உள்ளன.
அதனால், நம் நிர்வாக நடைமுறைகள் மற்றும் கொள்கை முடிவுகளில் சீர்திருத்தங்களுடன், அதிக வேகமும் தேவை.
சிறந்த அரசு நிர்வாகம் வழங்குவதில், மற்ற நாடுகளை விட, 11 ஆண்டுகள் முன்னிலையில் நாம் உள்ளோம்.
இதற்கு, 11 ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட முயற்சிகளே காரணம். தொழில் துவங்குவதற்கு மிகவும் உகந்த நாடுகள் பட்டியலில் வேகமாக முன்னேறியுள்ளோம்.
தொழில் துவங்குவதற்கு தடையாக இருந்த பழைய சட்டங்கள், நடைமுறைகளை நீக்கினோம். இதனால், உலக நாடுகள் முதலீடுகள் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
உலக நாடுகள் இந்தியாவின் தலைமையை அங்கீகரித்துள்ளன. உலக அளவிலான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா பங்கேற்க மட்டும் செய்யவில்லை, தலைமை வகிக்கிறது.
தற்போது நாம் மேற்கொண்டு வரும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள், கொள்கை முடிவுகள் ஆகியவை, அடுத்த, 1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |