அத்து மீறினால் தக்கபதிலடி கொடுப்போம்

இந்தியா, அமைதியை விரும்பும்நாடாக இருந்தாலும், அத்துமீறினால் தக்கபதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கைவிடுத்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதன்தொடக்கத்தில் லடாக் எல்லையில் அத்து மீறிய சீன ராணுவத்தினர் உடனான தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு 2 நிமிட மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது. மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக எழுந்துநின்று அஞ்சலி செலுத்தினர்.

வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மோடி பேசியதாவது: எல்லையைகாக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீண்போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடுதான். அதே நேரத்தில் அத்து மீறினால் எந்தவொரு சூழலிலும் தக்கபதிலடி கொடுக்கும் பலம் வாய்ந்த நாடாகும்.

இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தைபற்றி உலகிற்கே தெரியும். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவை கோப படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபடவேண்டாம். ஆத்திர மூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது.

இந்தியாவில் தற்போது 1 கோடி பிபிஇ கிட்கள் உற்பத்தி செய்கிறோம். சுமார் 900 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவில் கொரோனாபாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கையானது, தற்போது சிகிச்சையில் உள்ளோர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனாவை எதிர்த்துபோராடவும், அதன் பரவலை கட்டுப்படுத்தவும் முடிந்தது.இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...