வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

 வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் சுத்தப் படுத்தும்.

டெங்கு ஜுரம் வராமல் தடுக்க
வேப்ப இலைக் கொழுந்து, முடக்கற்றான், சுண்டைக்காய், மணத்தக்காளி, சுண்டை வற்றல் ஆகியவற்றை நெய் (அ) ஆமணக்கெண்ணெய் சேர்த்து வதக்கி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவு போல் உண்ண வேண்டும்.

பூரான் கடி குணமாக
வேம்பின் பூவை தண்ணீர் விட்டு அரைத்துக் கறி செய்து உருட்டி உருண்டையாகச் செய்து சாப்பிட்டு வர பூரான் கடி, அரிப்பு ஆகிய பிணிகள் குணமாகும்.

பொடுகு, அரிப்பு, சொறி, ரணங்கள் குணமாக
வேப்ப பூக்களைச் சேகரித்து சுத்தம் பார்த்து 100 கிராம் எடுத்து மண்சட்டியில் இடவும். 200 மில்லி தண்ணீரில் 50 கிராம் வெல்லத்தைக் கரைத்து ஊற்றி ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பின்பு 200 மில்லி நல்லெண்ணெயை ஊற்றி எரியும் அடுப்பில் வைத்து தைலப் பதத்திற்கு வருமளவிற்கு காய்ச்சவும்.வடிகட்டி தலையில் தேய்த்து வர பொடுகு, அரிப்பு, சொறி, ரணங்கள் முதலியவை நீங்கி குணமாகும்.

தலைவலி, காதுவலி நீங்க
கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூக்களைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். பித்த வாதத்தைப் போக்கும்.

பித்த வயிற்றுவலி
பித்தம் அதிகரித்தால் வயிற்றுவலி சிலருக்கு வரும். இந்த வயிற்று வலிக்குத் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் இந்நோய் பூரணமாகத் தங்கிவிடும்.

புதிய வேப்பம்பூவை சுத்தம் செய்து இரண்டு ஆழாக்கு நீரில் இரவு அடுப்பில் சூடு செய்து வைத்துவிடுதல் வேண்டும். காலையில் எழுந்ததும், அடுப்பில் இருக்கும் கசாயத்தில் 4ல் ஒரு பங்கு குடிக்க வேண்டும். பின் 3 மணிநேரம் சென்ற பின்னர் மூன்றில் ஒரு பங்கைக் குடித்தல் வேண்டும். பின் நான்கு மணிநேரத்திற்குப் பின் இரண்டில் ஒரு பங்கைக் குடிக்க வேண்டும். மீண்டும் மீதமிருக்கும் கஷாயத்தை மாலையில் குடித்து விடுதல் வேண்டும்

இம்முறையை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர குன்மம் என்னும் வயிற்றுவலி பூரணமாக நீங்கும்.

கட்டிகள் உடைய
வேப்பம் பூவையும், எண்ணெயையும் சேர்த்து அரைத்துக் கட்டிகளின் மேல் வைத்துக் கட்டிவர வெகு விரைவிலேயே எவ்வளவு கொடிய கட்டிகளானாலும் உடையும்.

அஜீரணக் கோளாறுகள்
பித்தம் தொடர்பான எல்லாவிதமான பிணிகளையும், தீவிரமாகவும், துரிதமாகவும் விரட்டும் மகத்துவம் வேப்பம் பூவிற்கு உண்டு.

வெப்பம் பூவையும், நில வேம்பையும் சேர்த்துக் கசாயம் வைத்துச் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நல்ல பசி எடுக்கும்.

வயிற்றுக் கிருமிகள் நீங்க
வேப்பம்பூவுடன், மிளகு, சிறிது உப்புச் சேர்த்து அரைத்து வயது வந்தவர்களுக்கு சுண்டைக்காய் அளவும், குழந்தைகளுக்கு 1 முதல் 2 பட்டாணி அளவும்; தினசரி காலை, மாலை இருவேளையும் உள்ளுக்குள் கொடுத்துவர, வயிற்றில் உள்ள அனைத்துக் கிருமிகளும் சாகும்.

இந்த மருந்து உருண்டையை நீரில் கரைத்தும் உட்கொள்ளக் கொடுக்கலாம்.

இந்நோய்க்கு வேப்பம்பூவுக்குப் பதில் வேப்பந்தளிரையும் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...