தேசிய மருத்துவ அடையாள அட்டை

தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் தனிமருத்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், நேற்று 7ஆவது முறையாக, பிரதமர் நரேந்திரமோடி தேசியக் கொடி ஏற்றிவைத்தார். பின்னர் பேசிய அவர், டிஜிட்டல் இந்தியாவோடு அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில், அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்கும் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க், அடுத்த ஆயிரம்நாட்களில் 6 லட்சம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.

இந்தியாவில் விஞ்ஞானிகள் 3 கொரோனா தடுப்பூசிகளை ஆய்வுசெய்து வருவதாகவும், அந்த ஆய்வுகள் வெவ்வேறு நிலையில் இருப்பதாகவும் மோடி கூறினார். தடுப்பூசி தயாரானவுடன் அதை அனைவருக்கும் குறுகியகாலத்தில் கொண்டு சேர்க்க திட்டம் தயாராக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சுகாதார முறைகளை புரட்சிகரமாக மாற்றும், தேசிய டிஜிட்டல் சுகாதாரதிட்டம் என்ற புதிய திட்டத்தையும் அவர் அறிவித்தார். இதன் படி, ஹெல்த் ஐடி என்ற பெயரில், ஒவ்வொருவருக்கும் மருத்துவ அடையாள அட்டைவழங்கப்படும் என்றும், அதில் நோய் பாதிப்பு, எடுத்துக்கொண்ட மருந்துகள், எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறப்பட்டது என்பன உள்ளிட்ட மருத்துவ விவரங்கள் அனைத்தும் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...