முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் இன்று காலமானார்

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்க்கு மிக நெருக்கமானவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

முன்னாள் ராணுவ அதிகாரியான ஜஸ்வந்த் சிங், பாஜகவை தோற்றுவித்தவர்களில் குறிப்பிடத் தக்க தலைவராக விளங்கினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதியமைச்சர், வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஜஸ்வந்த் சிங்.

நீண்டகாலமாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த ஜஸ்வந்த் இன்று ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் தொடர்ந்து மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைபெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், ஜஸ்வந்த் சிங் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பி்ல், “முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் செப்டம்பர் 27-ம் தேதி காலை 6.55 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். கடந்த ஜூன் 25-ம் தேதி பல்வேறு உடல்உறுப்புகள் செயலிழந்தது தொடர்பாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு ஜஸ்வந்த் சிங்கின் உயிர்பிரிந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1938-ம் ஆண்டு ஜனவரி 3-ம்தேதி ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டம், ஜசோல் கிராமத்தில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தவர் ஜஸ்வந்த்சிங். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வுபெற்றவரான ஜஸ்வந்த் சிங் தனது 60 வயதுகளில்தான் அரசியலுக்குள் நுழைந்தார்.

ஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்ததலவைர் அத்வானியோ ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு ஜஸ்வந்த்சிங் கட்சியில் சேர்ந்தார். ஜஸ்வந்த் சிங்கின் திறமைக்குக் குறுகிய காலத்திலேயே பாஜகவில் மரியாதையும், அங்கீகாரமும் கிடைத்தது.

1996-ம் ஆண்டு பாஜக தலைமையில் வாஜ்பாய் ஆட்சியில் நிதியமைச்சராக ஜஸ்வந்த் பொறுப்பேற்றார். அதன்பின் 1998-2002 ஆம் ஆண்டு வரையிலான வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதியமைச்சராக ஜஸ்வந்த் சிங் பதவி வகித்தார்.

மேலும், கடந்த 2012-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கும் ஜஸ்வந்த் சிங் முன்மொழியப்பட்டார். ஆனால், நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹமீது அன்சாரியிடம் ஜஸ்வந்த சிங் தோல்வி அடைந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடினமான காலக்கட்டத்திலும் இந் ...

கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவட ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்பு படுத்தி ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...