‘நாட்டின் ராணுவ ஏற்றுமதி 2024 – -25ம் நிதியாண்டில், 23,622 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 12.04 சதவீதம் அதிகம்’ என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
கடந்த 2023 – 24ம் நிதியாண்டில், நாட்டின் ராணுவ ஏற்றுமதி ஏற்றுமதி, 21,083 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2024 – 25ம் நிதியாண்டில், 12.04 சதவீதம் அதிகரித்து, 23,622 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையின் கீழ், 2029க்குள் ராணுவ ஏற்றுமதியை, 50,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் இலக்கை அடைவதை நோக்கி நம் நாடு முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2024 – -25ம் நிதியாண்டில், ராணுவ பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதியில், 42.85 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இது, உலக சந்தையில் இந்திய தயாரிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது.
‘ராணுவ தளவாடங்களில், பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருந்த இந்தியா, தற்போது சுயசார்பு இந்தியாவாக மாறி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறி உள்ளது’ என, ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |