தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், வாந்தி, பிரசவ வலி, குடல் ரணம், நீர்க் கோவை மற்றும் பல.
சுகப் பிரசவமாக
தினமும் இரவில் காய்ச்சிய பாலில் குங்குமப் பூ கலந்து அருந்திவர நாளடைவில் சுகப் பிரசவம் ஆகும்.
வாய் மணக்க
கர்ப்பிணிகள் வெற்றிளையுடன் சிறிது குங்குமப் பூ, ரோஜா இதழ்கள் சேர்த்துச் சாப்பிட வாய் மணக்கும், மற்றும் செரிமான சக்தி உண்டாகும்.
கண்நோய் குணமாக
குங்குமப் பூவுடன் தாய்ப் பால் விட்டு அரைத்து, இரண்டு சொட்டு கண்களில் விட நாளடைவில் கண் நோய்கள் நீங்கும்.
குடல் புண் ஆற
அதிகமாக மது அருந்தி குடலில் புண் உள்ளவர்கள் இதே மாதிரி காய்ச்சிய பாலில் குங்குமப் பூவைக் கலந்து அருந்தி வர வேண்டும். கார பதார்த்தங்களை உண்ணக்கூடாது. இரவில் அதிகநேரம் கண் விழித்திருக்கக் கூடாது.
தலைவலி, ஜலதோஷம் நீங்க
குங்குமப் பூவைத் தாய்ப்பாலில் உரைத்து நெற்றியில் பற்றுப் போட்டுக் கொள்ள நாளடைவில் தலைவலி ஜலதோஷம் நீங்கும்; மற்றும் குங்குமப் பூவுடன் கொஞ்சம் பனை வெல்லம், விளாம் பிசின், அபின் இவைகளைச் சேர்த்தரைத்து ஒரு சிறு வெள்ளைத் தாளில் தடவி நெற்றியின் மீது பற்றுப் போட்டாலும் இப்பிணிகள் நீங்கும்.
பெண்கள் பருவமடைய
பெண்களுக்கு குங்குமப் பூவை, சில நாட்களுக்குத் தொடர்ந்து உண்ணக் கொடுக்க நாளடைவில் விரைவில் பருவமடைவர்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.