நாட்டின் வரலாற்றில் அக்டோபர் 7 மிகமுக்கிய நாள்

மக்கள் பிரதிநிதியாக 20-ம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, “நமது நாட்டின் வரலாற்றில் அக்டோபர் 7 மிகமுக்கிய நாளாகும். 2001-ஆம் ஆண்டின் இதே நாளில்தான் குஜராத்தின் முதல்வராக நரேந்திரமோடி பொறுப்பேற்றார். அன்றிலிருந்து தொய்வில்லாமல் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார்,” .

அவரது  எண்ணங்களாலும், லட்சியங்களாலும், பண்புகளாலும் கவரப்பட்டு ஒவ்வொருஇந்தியரும் தற்போது இந்தியாவை உலகத்தின் தலைமைபொறுப்பில் நிலைநிறுத்த பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

130 கோடி இந்தியர்களின் எண்ணங்களை பிரதமர் மோடியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்  குஜராத்தின் முதல்வராக வளர்ச்சிக்கான புரட்சியை உருவாக்கிய மோடி, தற்போது பிரதமராக மிகவும் சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.

ஏழைகள், விவசாயிகள், பெண்கள், மற்றும் சமுதாயத்தில் நலிவுற்றபிரிவினருக்கு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களின் மூலம் அதிகாரம் அளித்து, அவர்களின் வாழ்வில் நேர்மறைமாற்றத்தை பிரதமர் உருவாக்கிவருகிறார்.

புஜ்ஜை நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்து மீட்டு வளர்ச்சிப்பாதையில் வழி நடத்தியதில் ஆகட்டும், குஜராத்தை அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக மாற்றியதில் ஆகட்டும், கடுமையான உழைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையோடு குஜராத்தை போன்ற வளர்ச்சியை நாடுமுழுவதும் ஏற்படுத்துவதில் ஆகட்டும், இவை அனைத்துமே மோடி அவர்களின் ஓய்வில்லா உழைப்பின் விளைவுகள்தான் என்று  அமித் ஷா கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...