பெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழிப்பாள் அரக்க குணத்தையும் ஒழிப்பால்

இந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. சக்தியின் ரூபமான பெண்களை கொச்சைப் படுத்தியுள்ளனர்.

.
அதாவது மனு ஸ்மிருதி என்ற சானதான தர்மம் ’’பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்ட பெண்களுக்கும் பொறுந்தும். எல்லா பெண்களுக்கும் தீட்டு உண்டு என கூறுவதாக பொய்யுரைத்து விஷமத்தை கக்கியுள்ளார்.

மனு ஸ்ம்ருதி என்பது கிமு 200 க்கும் கிமு 150 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. அது மக்கள் மன்னர்கள் வாழ்க்கை முறை, ஆட்சி முறை, ஒழுக்க நெறி, ஆண் பெண் பேதம் பாரா கல்வி, ஏன் மருத்துவம், வான் சாஸ்திரம் என்று அனைத்தையுமே பேசுகிறது.

மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. இதில் பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை காணலாம். மூன்றாவது சருக்கத்தின் அறுபத்திரண்டாவது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று எச்சரிக்கிறது. பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனுங்கூட வணங்கக் கடமைப் பட்டிருப்பதாக அது கூறுகிறது.

பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள். இல்லாவிடில் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தகைய நல்லபலன்களும் விளைந்திடாது என்கிறது மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் ஐம்பத்தைந்திலிருந்து, ஐம்பத்தொன்பது வரையிலான செய்யுள்கள் பெண்கள் நலனையே பிரதானமாக வலியுறுத்துகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும் , ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம்தந்தார். அதில் மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டி காட்டியிருந்தார். அதாவது பல்வேறு காலகட்டங்களில் சில சுயநல விரும்பிகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கள் சுய கருத்துக்களை காலப்போக்கில் புகுத்தியதன் வெளிப்பாடுகள்தான் இந்த முரண்பாடுகள். இந்த விஷமம் நிறைந்த இடை சொருகல்களை தான் பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட ஆங்கிலேயன் அன்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக்கினான். அவைகளையே இன்றைய நவீன கால பறங்கியர்களான வீரமணி, ஸ்டாலின் திருமாவளவன்கள் போன்றோர் மூலாதாரமாக கொண்டு பேசி வருகின்றனர்

திருமாவளவன் பெண்களை பற்றி கூறிய கேவலமான சொற்றொடர்கள் எல்லாம் மனுவில் இருப்பதாக சமஸ்கிருதம் படித்த எந்த பண்டிதரும் இதுவரை கூறியதில்லையே!. .. திருமாவளவன்களின் பாணியில் ஒருவேளை அது பெண்களை கொச்சைப்படுத்தி இருக்குமேயானால், இன்று தேசத்தையே தாயாக பாவிக்கும் எண்ணத்தை, மனைவியை தவிர அனைவரையும் தாயக, சகோதரியாக கருதவேண்டும் என்ற கருத்தாக்கத்தை, பெண் தெய்வ வழிபாட்டை, சிறுமிகளை பெண் தெய்வங்களாக பாவித்து வழிபடும் பழக்கத்தை. பெண்களை அவமதித்ததற்காக தங்கள் மணி மகுடங்களை இழந்த பல மன்னர்களின் புராண வரலாற்றை எல்லாம் இந்த தேசம் பெற்றிருக்காதே

ஆடு, மாடுகளை போன்று ஐரோப்பிய தேசத்து ஆன், பெண்கள் எல்லாம் எந்த வரையறையும் இன்றி காமத்திலேயே வாழும்போது. தாய் தந்தை, கணவன், மனைவி என்று என் தேசத்து மக்கள் கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வு வாழ்கின்றனர் என்றால் அது இந்து மதத்தின் கொடையல்லவா என்ற கவிஞர் கண்ணதாசனின் கூற்று வேதவாக்கு அல்லவா?.

ஆனால் எதையும் ஏற்றுக்கொள்ளாத திருமாவளவன் கூறுகிறார். எனது 5ந்து நிமிட துண்டிக்கப்பட்ட வீடியோவை மட்டுமே பார்த்துவிட்டு பேசாதீர், 45 நிமிட முழு வீடியோக்களையும் பாருங்கள் என்கிறார்.ஆனால் 4500 நாட்கள் தொடர்ந்து வேத பாடங்களை கற்றவர்களுக்கும், சமஸ்கிருதத்தில் தெளிவு பெற்றவர்களுக்கும் கிட்டாத வேத உரைகளெல்லாம், இவை எதையும் அறிந்திராத , எதற்கும் நொடிப்பொழுதேனும் நேரம் ஒதிக்கிடாத திருமாக்களுக்கு மட்டும் எப்படி கிட்டியதாம்?.

நன்றி தமிழ்தாமரை வி.எம்.வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடினமான காலக்கட்டத்திலும் இந் ...

கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவட ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்பு படுத்தி ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...