நாட்டின் நலனே, நம் அனைவரின் நலன்

கேவடியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டுள்ள பல்வேறுதிட்டங்களால் அந்த பகுதியின் சுற்றுலா கூடுதல் வளர்ச்சியடையும். சர்தார் பட்டேலைக் காண விரும்பும் சுற்றுலாப் பயணிகள், இனி கடல்-விமான சேவையைப் பயன்படுத்தி ஒற்றுமை சிலையைச் சென்று காணலாம்

நாம் இன்றுகாணும் இந்தியாவைவிட மிக துடிப்பான மற்றும் சக்திவாய்ந்த, கலாச்சார ஒற்றுமையுடன் கூடிய நாட்டை உருவாக்குவதற்காக பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே வால்மீகி மகரிஷி முயற்சிகள் மேற்கொண்டடார். ஒற்றுமை தினத்தைக் கொண்டாடும் அதேநாளில் வால்மீகியின் பிறந்தநாளும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா பரவலுக்கு எதிரான நாட்டின் கூட்டுவலிமையும், போராடும் தன்மையும் இதுவரை இல்லாத ஒரு புதுஅளவை எட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

காஷ்மீரின் வளர்ச்சிக்கு எதிராக இருந்து வந்த பல்வேறுதடைகளை பின்னுக்குத் தள்ளி, தற்போது அந்த மாநிலம் புதியவளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் சர்தார் பட்டேலின் கனவை நனவாக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் பின்பற்றி அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.

130 கோடி மக்களும் இணைந்து சமத்துவம் மற்றும் வாய்ப்புகள் நிறைந்தவகையில் வலுவான மற்றும் திறமையான நாட்டை உருவாக்கி வருகிறாரகள். தன்னிறைவு அடைந்த தேசத்தால் மட்டுமே அதன் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் நம்பிக்கைகொள்ள முடியும். எனவே நம் நாடு பல்வேறு துறைகளில், குறிப்பாக பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு அடையும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எல்லை பகுதிகளின் வளர்ச்சி, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் பாதுகாப்பு:

எல்லை சார்ந்த விஷயங்களிலும் இந்தியாவின் பார்வையும் அணுகுமுறையும் மாறி இருக்கிறது. இந்திய நிலத்தை குறி வைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைத்து வருகிறது. நாட்டின் எல்லைகளில் 100 கிலோமீட்டர் அளவான சாலைகள் பல்வேறு மேம்பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை முழுவதும் பாதுகாக்க இந்தியா தயாராக இருக்கிறது.

இந்த நடவடிக்கைகளுக்கு இடையேயும் உலகநாடுகளும் இந்தியாவும் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. தீவிரவாதத்திற்கு சிலர் ஆதரவளித்து வருகிறது. இதுபோன்ற விஷயங்கள் உலக அளவில் இன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் . தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும், அரசுகளும், மதங்களும் இணைந்து செயல்படவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அமைதி உணர்வு, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பரமரியாதை முதலியவை உண்மையான மனித தன்மையின் அடையாளங்கள். தீவிரவாதம்-வன்முறையால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை . நமது பன்முகத் தன்மை தான் நம்அடையாளம் மற்றும் பிறரிடம் இருந்து நம்மை தனித்து நிறுத்துகிறது. இந்தியாவின் இந்த ஒற்றுமைதான் பிறரை விழிப்புடன் இருக்கச் செயகிறது நம் பன்முகத்தன்மையை நமது பலவீனமாக்கவே அவர்கள் முயல்கிறார்கள்

இன்று நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு புல்வாமாதாக்குதல் சம்பவத்தைத் நினைவூட்டுகிறது. இந்த நிகழ்வை நம்நாடு என்றும் மறக்காது. நமது வீரத் திருமகன்களின் இழப்பினால் முழுநாடும் கவலையுற்றது. இந்த சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட சில அறிக்கைகளை நாடு என்றும் நினைவில் கொண்டிருக்கும். நமது அண்டை நாட்டின் பாராளுமன்றத்தில் அன்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது நிகழ்ந்துவரும் அரசியல் சம்பவங்கள் சுயநலத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்துகிறது . புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு நடைபெற்றுவரும் அரசியல் சம்பவங்கள், தங்களது அரசியல் லாபத்திற்காக எந்தளவிற்கு அவர்கள் செல்வார்கள் என்பதைக் காட்டுகிறது. அரசியல்கட்சிகள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வீரர்களின் மன உறுதியை கருத்தில்கொண்டு தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடாது .

தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற தேசத்திற்கு எதிரான சக்திகளுடன் தங்களது சுயநலத்திற்காக செயல்படுவோர் எந்தநிலையிலும் தங்களது நாட்டின் நலனுக்காகவோ அல்லது தங்களின் கட்சியின் நலனுக்காகவோ செயல்படமுடியாது . நாட்டின் நலனே, நமது அனைவரின் உயரிய நலனாக இருக்க வேண்டும் . அனைவரின் நலன்களையும் நாம் கருத்தில் கொண்டு செயல்படும்போதுதான் நாம் வளர்ச்சி அடைய முடியும் .

பிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் குஜராத் மாநிலம் கேவடியாவில் நடைபெற்ற ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பேசியது 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...