ஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறும்

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் ஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு ள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.இந்தியத்தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் கர்நாடக மாநிலக் கிளை ஏற்பாடுசெய்த ‘எலக்ட்ரிக் வாகன கருத்தரங்கு 2020’ என்ற இணையக் கருத்தரங்கில் உரையாற்றிய நிதின் கட்கரி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கி அரசு பணியாற்றுகிறது என்றார். ‘எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. எலெக்ட்ரிக்வாகனங்கள் தயாரிப்பு மேற்கொள்வதை அரசு தொடர்ந்து ஊக்குவிப்பதன் காரணமாக உலகின் பெரிய மின்சார வாகனங்கள் சந்தையாக இந்தியா உருவெடுக்கும்,’

எலெக்ட்ரிக் வானங்கள் உற்பத்திசெலவை ஆட்டோமொபைல் தொழில்துறையினர் குறைத்தால், விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும், எண்ணிக்கை அதிகரிப்பதால் அதுசார்ந்த தொழிற்துறையினர் பலன் பெறுவர். வாகனங்களின் தரத்தை நிர்வகிப்பதும் அவசியம் . ஆட்டோமொபைல் துறையில் அதிகபட்ச உற்பத்தியால், வளர்ந்துவரும் ஆட்டோமொபைல் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும்.

திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்திசெய்யும் வல்லமையை இந்திய உற்பத்தியாளர்கள் பெற்றிருக்கின்றனர் , இதன் வாயிலாக அதிக வேலை வாய்ப்புகளை மட்டுமின்றி, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் பெறமுடியும். ‘இ-வாகனங்கள் அதிகத்திறன் கொண்டவையாகவும், சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் இருக்கும். கச்சா எண்ணைய் இறக்குமதி மற்றும் காற்றுமாசு ஆகியவை நாட்டின் இரண்டு பிரச்சினைகள். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை ஒருங்கிணைந்த அணுகு முறையில் மேற்கொள்ள வேண்டும்’, என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...